அணு ஆயுதத்துக்கு இணையான சக்தி கொண்ட ஏவுகணை: தென் கொரியா தயாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

அணு ஆயுதத்துக்கு இணையான சக்தி கொண்ட ஏவுகணை: தென் கொரியா தயாரிப்பு

 சியோல், செப். 5- தென் கொரிய நாடு மூன்று டன் எடையில் அணு ஆயுதத்துக்கு நிகரான சக்தி கொண்ட ஏவுகணையை தயாரித்து வருகிறது. இது குறித்து தென் கொரியாவின் யோன்ஹேப் செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், புதிய ஏவுகணை தரைவிட்டு தரை பாயக் கூடியது. 350 முதல் 400 கி.மீ தூரம் செல்லக் கூடியது எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை தரைவிட்டு தரை பாயக் கூடியது. 350 முதல் 400 கி.மீ தூரம் செல்லக் கூடியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், அணுஆயுத ஏவுகணைகளையும் இடை மறித்து அழிக்கக் கூடியது. இது சுரங்கங் களைக் கூட ஊடுருவி ஏவுகணை கட்ட மைப்புகளை அழிக்கும் திறன் வாய்ந் தது. வட கொரியாவின் அனைத்துப் பகுதிகளையும் தகர்க்கக் கூடியது. அண் மையில் தென் கொரியா ஏவுகணை தயா ரிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டது.

கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமைதியை நிலை நாட்டவும் வலுவான, அதிக தூரம் சென்று இலக்கைத் தாக்கக் கூடிய, துல் லியமான ஏவுகணைகள் தயாரிப்போம் என்று தென் கொரிய அரசு வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏவுகணை தயாரிப்பில் வட கொரி யாவும் தென் கொரியாவும் போட்டா போட்டி போட்டு செயல்படுகின்றன. 2020இல் தென் கொரியா பிஹ்uஸீனீஷீஷீ-4 ஹியுன்மூ 4 என்ற குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையைத் தயாரித்தது. உடனே வடகொரியாவும் எஸ்ஆர்பிஎம் எனப்படும் குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை சோதித்தது. தென் கொரியா தனது பட்ஜெட்டில், 315.2 ட்ரில்லியன் வான் (அந்நாட்டு நாணயம்) அதாவது அமெ ரிக்க டாலர் மதிப்பில் 273 பில்லியன் டாலரை ராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளது.

2030க்குள் ஆசியாவின் பெரும்பா லான நாடுகளிடம் பலம் வாய்ந்த ஏவு கணைகள் இருக்கும் என்று ராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment