சம உரிமை கோரி ஆப்கன் பெண்கள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

சம உரிமை கோரி ஆப்கன் பெண்கள் போராட்டம்

காபூல், செப். 5- ஆப்கானிஸ்தா னில் அதிகாரத்தை கைப் பற்றியுள்ள தலிபான் அமைப்பு சார்பில் நடத் தப்பட்ட செய்தியாளர் கள் சந்திப்பில், ஆப்கா னிஸ்தானில் பெண்க ளுக்கு இஸ்லாமிய சட் டப்படி அனைத்து உரி மைகளும் வழங்கப்படும் என்று தெரி விக்கப்பட்டி ருந்தது.

பெண்கள் சுகாதாரத் துறையிலும், பிற துறை களிலும் வேலை செய்ய லாம் என்றும் பெண்க ளுக்கு எதிராக பாகுபாடு இருக்காது என்றும் தலி பான்கள் தெரிவித்திருந் தனர்.

இந்த நிலையில் புதி தாக உருவாகவுள்ள ஆப் கானிஸ்தான் அமைச்சர வையில் பெண்களின் பங்கும் இருக்க வேண்டும் எனக் கோரி, அந்நாட்டு பெண்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். காபூ லில் உள்ள அதிபர் மாளி கைக்கு வெளியே கூடிய பெண்கள், அமைச்சரவை யில் பெண்களுக்கு வாய்ப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்கானிஸ்தானில் கல்வி, சமூகம், பேச்சு சுதந் திரம், அரசியல் உள்ளிட் டவற்றில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு முழு உரிமைகள் வழங் கப்பட வேண்டும், மனித உரிமைகளை நிலை நாட்ட வேண்டும், பழை மைவாதமும் மத அடிப் படை வாதத்திற்கும் திரும்ப முடியாது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி அவர்கள் முழக்கங் களை எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது கையில் ஆயுதம் ஏந்திய தலிபான்கள் அங்கு இருந் தனர்.

இருப்பினும் போராட்டம் நடைபெற அவர்கள் அனுமதி அளித்தனர்.

No comments:

Post a Comment