டோக்கியோ, செப். 5- ஜப்பானில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக் கைகளை எடுப்பதில் மிக வும் மந்தமாக செயல்பட் டதாக பிரதமர் யோசி ஹைட் சுகா மீது விமர்ச னங்கள் எழுந்தன.
அதோடு கரோனா வைரஸ் தொற்று அச்சு றுத்தலுக்கு மத்தியில் சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி ஒலிம் பிக் போட்டிகளை நடத் தியதால் பிரதமர் யோசி ஹைட் சுகா மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந் தனர்.
இந்தக் காரணங்க ளால் குறுகிய காலத்தி லேயே மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பெரி தும் சரிந்தது. சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவு கள் பிரதமர் யோசிஹைட் சுகாவுக்கு மக்கள் மத்தி யில் இருந்த ஆதரவு 70 சதவீதத்திலிருந்து 26 சத வீதமாக குறைந்து விட் டதாக தெரிவித்தன.
இந்த நிலையில் வரு கிற 29-ஆம் தேதி நடை பெற உள்ள ஜப்பானின் ஆளும் தாராளவாத ஜன நாயக கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வ தற்கான தேர்தலில் தான் போட்டியிடப் போவ தில்லை என பிரதமர் யோசிஹைட் சுகா அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் இந்த மாத இறுதியில் பிரதமர் பதவியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டோக்கி யோவில் ஆளும் தாராள வாத ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பேசிய யோசிஹைட் சுகா கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடு வதை தவிர்த்து கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்தார்.
ஜப்பானை பொறுத்த வரையில் நாடாளுமன்றத் தில் பெரும்பான்மை வகிக்கும் அரசியல் கட்சி யின் தலைவர் யாரோ அவரே அரசின் தலைவ ராகவும் அதாவது பிரதம ராகவும் தேர்வு செய்யப் படுவார்.
அந்த வகையில் பிர தமர் யோசிஹைட் சுகா கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளதால், அவர் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகுவார் என தெரிகிறது. அதன்படி ஆளும் தாராளவாத ஜன நாயக கட்சியின் தலைவ ராக தேர்வு செய்யப்படும் நபர் ஜப்பானின் புதிய பிரதமராக பதவி ஏற்பார்.
ஜப்பானின் தடுப்பூசி திட்ட தலைவர் டாரோ கோனா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சானே தகைச்சி ஆகிய இருவரும் களத்தில் உள்ள முக்கிய வேட்பா ளர்களாக அறியப்படுவ தாகவும் இவர்களில் ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப் புள்ளதாகவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

No comments:
Post a Comment