காபூல், செப். 5- ஆப்கானிஸ் தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான் கள் சீனா தங்களின் மிக முக் கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலிபான் அமைப்பின் செய் தித் தொடர்பாளர் ஜபிப ஹுல்லா முஜாஹித் கூறிய தாவது:-
சீனா எங்களின் மிக முக் கிய கூட்டாளி. ஆப்கானிஸ் தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனா வைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஒரு அடிப் படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தை வலுப் படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்பட வைக்கலாம், நவீனமயமாக்கலாம். அதோடு சீனாவின் மூலமாக உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எங்கள் சுரங்க தயாரிப்புகளை எடுத்துச் செல்லலாம்.
சீனாவை ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் அய்ரோப்பா வுடன் இணைக்க முயற்சிக்கும் சீனாவின் ‘ஒன் பெல்ட், ஒன் ரோடு' முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இவ்வாறு ஜபிபஹுல்லா முஜாஹித் கூறினார்.
மனித உரிமைகளுக்கு தலிபான்கள் மதிப்பளிக்க வேண்டும்
அய்ரோப்பிய யூனியன் வலியுறுத்தல்
காபூல், செப். 5- தலிபான்கள் மனித உரிமைகளுக்கு மதிப் பளிக்க வேண்டியது அவசியமாகும் என அய்ரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. அய்ரோப்பிய யூனியனுக்கான வெளியுறவுக் கொள்கை தலைவர் போர்ரெல் இது குறித்து கூறியதாவது: - ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிப்பதற் காக ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயராக உள்ளோம்.
தலிபான்கள் அரசின் செயல்பாடுகளை பொறுத்து அவர்களுடனான தொடர்பு அதிகப்படுத்தப்படும். ஆப் கானிஸ்தானின் புதிய அரசாங்கம் கண்டிப்பாக பயங்கர வாதிகளுக்கு புகலிடம் கொடுக்கக் கூடாது. மனித உரிமை களுக்கு மதிப்பளிப்பதோடு, சட்டம் ஒழுங்கு மற்றும் சுதந் திரமான ஊடகங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பிற அரசியல் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார்.

No comments:
Post a Comment