பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இறுதி மரியாதை
திருச்சி, செப்.5 திருச்சி, புத்தூர், பெரியார் மாளிகையில் சிறு குழந்தைப் பிராயத்திலிருந்து வளர்ந்து வந்த பெரியார் மாளிகை செங்கோடன் உடல்நலக் குறைவால் 24.8.2021 அன்று காலை திடீரென மறைவுற்றார்.
அவரது உடல் பெரியார் மாளிகையிலுள்ள அன்னை மணியம்மை கூட்டரங்கில் கழகத் தோழர்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. செங்கோடனின் தாயாகவும், சகோதரி யாகவும் திகழ்ந்து வந்த பெரியார் மாளிகை காப்பாளர் இரா.தங்காத்தாள், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், பேராசி ரியர் சுப்ரமணியன், மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், மாநில தொழிலா ளரணி செயலாளர் மு.சேகர். மாநகர தலைவர் துரைசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர்.
பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இறுதி மரியாதை
தொடர்ந்து கழகப் பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். பின்னர் நடந்த இரங்கல் கூட்டத் தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய இரங்கல் அறிக்கையை வாசித்து இரங்கலுரையாற்றினார்.
இதில் மண்டல தலைவர் மு.நற்குணம், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளி தலைமை யாசிரியர் பாக்கியலட்சுமி, பெரியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் வனிதா, பெரியார் தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் விஜயலட்சுமி, நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செண்கபவள்ளி மற்றும் அனைத்து பணியாளர்கள், தமிழ்ச்செல்வன், பிரபா, செந்தில், உள்ளிட்ட ஓட்டுநர்கள், முதி யோர் இல்லம், குழந்தைகள் இல்லத்தை சார்ந்தவர்கள், முபாரக், மகாமணி, கண்ணன், முருகன், அறிவுச்சுடர், இலால் குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து, பாபு, பிச்சை மணி, சு.இளங்கோவன், மகளிரணியைச் சேர்ந்த கிரேசி, சாந்தி, சங்கீதா, வசந்தி, நேதாஜி, மணிவேல், தமிழ்ச்சுடர், கனகராஜ், சங்கிலிமுத்து, காட்டூர் பாலு, பெல் ஆறுமுகம், திரு ஞானம், விடுதலை சார்பில் ராமமூர்த்தி, செந்தமிழினியன், வெற்றி, விஜயராஜ், பாண்டி உள்ளிட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் மறைந்த செங்கோடன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
நாகம்மையார் இல்லக் குழந்தைகள் மறைந்த செங்கோடன் உடலை புத்தூர் நால்ரோடு வரை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன்பின் வாகனம் மூலம் ஓயாமரி இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

No comments:
Post a Comment