டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· உபி முசாபர் நகரில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில், பாஜகவிற்கு எதிராக தேர்தலில் பிரச்சாரம் செய்வது என விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
· மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தேச நலனுக்கு எதிராக செயல்படுகிறது என ஆர்.எஸ்.எஸ். ஆதரவு ஏடான பஞ்ஜன்யா பத்திரிக்கையில் வந்த செய் திக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.
· மத்தியப் பிரதேச பாஜக ஆட்சியில் மருத்துவப் படிப்பில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெக்டேவர் மற்றும் தீன் தயாள் உபாத்யாயா குறித்து பாடங்கள் சேர்க்கப்பட்ட தற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தி டெலிகிராப்:
· ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழக முகப்பு விளம்பரங்களில், பெரும் பதாகைகளில் நேரு, மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டன. இது அரசியல் பழிவாங்கும் செயல்.
சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் நிஜ ஹீரோக்களில் ஒருவரை வரலாற்றில் இருந்து மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த அரசியல் பழிவாங்கும் செயல் நல்லதுக்கல்ல. இது அவர் களின் குறுகிய மனப்பான்மையை வெளிக்காட்டுகிறது. இது, ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரர்களையும் அவமானப்படுத்தும் செயல் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மோடி அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment