பொதுச் சொத்துகளைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

பொதுச் சொத்துகளைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்க!

பிரதமர் மோடிக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,செப்.5- பொதுச் சொத்துகளைத் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று முன்தினம் (3.9.2021) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும். அவற்றில் பலவும் இந்தியாவைத் தொழில்மயமான - தற்சார்புடைய நாடாக நிலை நிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை. அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்கு, மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதனால், அந்நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும் உரிமையும் உள்ளது.

இந்தப் பணமாக்கல் என் னும் நடவடிக்கை, நாட்டின் பொருளா தாரத்தின் மீதும்; தொடர்புடைய நிறுவனங்களின் பணியாளர்கள் மீதும்; இந்நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும் சிறு-குறு தொழில்துறை மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் நடவடிக்கையை, எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், அது விலைமதிப்பற்ற அரசுச் சொத்துகள் ஒருசில குழுக்கள் அல்லது பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கே வழிவகுக்கும்.

எனவே, ஒன்றிய அரசினுடைய பொதுச்சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

மேலும், இந்நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுடனும் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இதுபோன்ற பெரிய முடிவுகளை ஒன்றிய அரசு எடுக்கவேண்டும் என்றும் அக்கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment