டில்லி சட்டப்பேரவையில் இருந்து செங்கோட்டை வரை சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

டில்லி சட்டப்பேரவையில் இருந்து செங்கோட்டை வரை சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

புதுடில்லி, செப்.5 ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1912ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து டில்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டது. அந்த காலத்தில் டில்லி சட்டப்பேரவை, ஒன்றிய சட்டப்பேரவையாக இருந்தது.

பின்னர் கடந்த 1926ஆம் ஆண்டு சட்டப்பேரவை, நீதிமன்றமாக மாற்றப்பட்டது. தற்போது இந்த கட்டடத்தில் டில்லி சட்டப்பேரவை செயல்படுகிறது. இங்கு ரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து டில்லி சட்டப்பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் கூறியதாவது:

கடந்த 1993ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போதே டில்லி சட்டப்பேரவை வளாகத்தில் இருந்து செங்கோட்டைக்கு ரகசிய சுரங்கப்பாதை இருப்பதாக செவி வழியாக கூறப்பட்டது. அன்றுமுதல் சுரங்கப் பாதையை தேடி வந்தோம். நீண்ட தேடலுக்குப் பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் ரகசிய சுரங்கப் பாதையின் நுழைவு வாயிலை கண்டுபிடித்துள்ளோம். இப்போதைய சட்டப்பேரவை வளாகம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீதிமன்றமாக இருந்துள்ளது. இங்கு மரண தண்டனை நிறைவேற்றும் அறைகள் உள்ளன. அவற்றை நாங்கள் திறக்கவில்லை. 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி இந்த அறைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். இவை சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவிடமாக அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஊடக செய்தியில், "ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களை ரகசியமாக நீதிமன்றத்துக்கு அழைத்து வர, இங்கிருந்து செங்கோட்டை வரை ரகசிய சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சுதந்திர போராட்ட, வீரர்களை பொதுமக்கள் பார்க்க முடியாமல் செய்துள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரக் கல்வியில் 25 புதிய படிப்புகள்: யுஜிசி ஒப்புதல்

புதுடில்லி,செப்.5- தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 3 அரசு பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வி முறையில் 25 புதிய படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல்  வழங்கியுள்ளது.

தொலைதூரக் கல்வி முறைக்கு நாடு முழுவதும் கூடுதலாக 11 பல்கலைக்கழகங்களில் 74 படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல்  வழங்கியுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 5 இளநிலை, 5 முதுநிலை என 10 படிப்புகளுக்கும், சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு இளநிலை, 2 முதுநிலை என 3 படிப்புகளுக்கும், புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தில் 8 இளநிலை, 4 முதுநிலை என 12 படிப்புகளுக்கும் யுஜிசி தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களை யுஜிசி இணையதளத்தில் (<https://www.ugc.ac.in>) தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment