திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி தந்தையார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி தந்தையார்

சிக்கவலம் இரா.கோதண்டபாணி படத்திறப்பு: காணொலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவுரை

திருவாரூர்,செப்.28- நாகை-திராவிடர் கழக திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் தலைமைஆசிரியர் கோ.செந் தமிழ்செல்வி, ஆசிரியர் கோ.மாலா, கோ.தங்கத்துரை ஆகியோரின் தந்தையாரும் ஆசிரியர் இரா.சிவக்குமார், ஆசிரியர் முருகேசன். .கிருத்திகாதேவி ஆகியோரின் மாமனாரும், காவியன், கண்மணி, ஹரிணி, அருந்தமிழ்ச்செல்வன் ஆகியோரின் தாத்தாவும், கோ.தேவகி அவர்களின் வாழ்விணையருமான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பெரியார் பெருந்தொண்டர் சிக்கவலம் இரா.கோதண்டபாணி அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்சி 21-9-2021 அன்று செவ்வாய் முற்பகல் 11.30 மணியளவில் நாகை மாவட்டம் சிக்கவலம் இல்லத்தில் நடைபெற்றது

மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி தனது தந்தையார் வாழ்க்கையில் கடந்துவந்த பாதையை நினைவு கூர்ந்து வரவேற்று உரையாற்றினார்

நண்பர்கள் பாலசுப்ரமணியன், .தி.மு. அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சி.பி.அய்.(எம்) தோழர் பொன்னுசாமி தி.மு. பொறுப்பாளர் ராஜேந்திரன், திருவாரூர் நகர தி.மு. செயலாளர் வாகை. பிரகாஷ், கோவை மாவட்ட தி. செயலாளர் தி..செந்தில்நாதன், தஞ்சை மாவட்ட தி. செயலாளர் .அருணகிரி, மாநில பக தலைவர் மா.அழகிரிசாமி, மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராசு, தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி, மண்டலத் தலைவர் கி.முருகையன், கீழையூர் ஒன்றிய தி.மு. செயலாளர் தாமஸ்ஆல்வா எடிசன், தி.மு. தலைமைச்செயற்குழு உறுப்பினர், மாநில பக துணைத்தலைவர் இல.மேகநாதன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அமிர்தராஜா, கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் நினைவுரையாற்றினார்கள்

நாகை மாவட்ட தி.மு. செயலாளர் என்.கவுதமன் நிகழ்விற்கு தலைமை வகித்து படத்தினை திறந்துவைத்து நினைவுரையாற்றினார்

அறக்கட்டளை தொடக்கம்

பெரியார் பெருந்தொண்டர் கோதண்டபாணி நினைவு அறக்கட்டளையை திருவாரூர் மாவட்ட தி.மு. செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தொடங்கிவைத்து நினைவுரையாற்றினார்.

கோதண்டபாணி நினைவு அறக்கட்டளை சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ10,000 கோ.தங்கதுரை அவர்கள் பூண்டி

கே. கலைவாணன் முன்னிலையில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம்  வழங்கினார்.

காணொலியில் தமிழர் தலைவர்

இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் காணொலியில் நினைவுரையாற்றினார்

பெரியார் பிஞ்சு செ.சி.கண்மணி நன்றி கூறினார். நாகை மாவட்ட கழக செயலாளர்  ஜெ.புபேஸ்குப்தா இணைப்புரையாற்றினார்

No comments:

Post a Comment