ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கன்சர்வேடிவ் கட்சி தோல்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கன்சர்வேடிவ் கட்சி தோல்வி

பெர்லின், செப். 28- ஜெர்மனியில் நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கன்சர்வேடிவ் கட்சி தோல்வி அடைந்திருக்கிறது. பன்ஸ்ட்டாக் என்று அழைக் கப்படும்  ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல் 26.9.2021 அன்று நடைபெற்றது.

இத்தேர்தலில் ஏஞ்சலா மெர்க லின் பழைமைவாத கிறிஸ்துவ ஜன நாயகக் கூட்டணி கட்சிக்கும், மத் திய இடது சமூக ஜனநாயக கட் சிக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் மொத்தம் உள்ள 730 இடங்களில் பிரதமர் வேட்பாள ராக ஒலாஃப் ஸ்கோல்ஸ் என்ப வரை முன்னிறுத்திய சமூக ஜன நாயக கட்சி 205 இடங்களை கைப் பற்றியுள்ளது. ஏஞ்சலா மெர்கலின் பழமைவாத கூட்டணிக்கு 194 இடங்கள் கிடைத்தன. இந்த வெற்றியை அடுத்து ஜெர்மனியின் அடுத்த பிரதமராக ஸ்கோல்ஸ் விரைவில் பதவியேற்ற இருக்கிறார்.

மெர்கலின் பழைமைவாத கூட் டணிக்கு 24.5 விழுக்காடு வாக்கு களும், மத்திய இடது சமூக ஜன நாயக வாதிகள் கட்சிக்கு 26 சத விகித வாக்குகளும் கிடைத்திருக் கின்றன.

ஜெர்மனியின் மேனாள் பிர தமர் ஏஞ்சலா மெர்கலின் தலை மையின் கீழ் கடந்த 2005 முதல் 16 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த பழைமைவாத கிறிஸ்துவ ஜன நாயக கட்சியின் ஆட்சி தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெர்மனி யில் புதிய ஆட்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் அமைச்சரவை குறித்து தன்னுடைய கட்சியின் மூத்த தலைவர்கள் உடனே பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஒலாஃப் ஸ்கோல்ஸ் ஆலோசனை செய்து வருகிறார்.

No comments:

Post a Comment