தூத்துக்குடி, செப்.28 19.9.2021 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி, பெரியார் மய்யம், அன்னை மணியம் மையார் அரங்கில் தி.ப. பெரியாரடியான், குவைத் செல்லபெருமாள் ஆகியோரது படத்திறப்பு நிகழ்வுகள் சிறப்புடன் நடைபெற்றன.
தமிழ்நாடு சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் வருகை தந்தார். அவரை மண்டலத் தலைவர் சுகாசி, மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி ஆகியோர் தலைமையில் வரவேற்றனர். பேராசிரியர் தி.ப.பெரியார டியான அவர்களின் மகள் வை.மணிமொழி பயனாடை அணிவித்து வரவேற்றார்.
மாவட்டத் தலைவர் மா.பால் ராசேந்திரம் தலைமை ஏற்றார். மாவட் டச் செயலாளர் மு.முனியசாமி அனை வரையும் வரவேற்று உரையாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர் உழைப்பையும், ஆட்சிக்கு வந்த சூழலையும், ஆட்சியில் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் குறுகிய காலச் சாதனைகளையும், சமூக நலத்துறை அமைச்சரின் செயல்பாடு களையும் தொகுதி மக்கள் மீது அவரும், அவரின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பற்றிய செய்திகளைத் தம் தலைமை உரையில் தலைவர் ஆற்றினார். அமைச்சரை கழகம் சார்பில் பயனாடை தந்து மாநில மகளிரணி அமைப்பாளர் சி.கிருஷ்ணேஸ்வரி வரவேற்றார்.
அடுத்து, அமைச்சர் அவர்கள் மேனாள் மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் அவர் களின் படத்தினை அவர்தம் குடும்பத் தினரும், கழகத் தோழர்களும் புடை சூழத் திறந்து வைத்தார்கள். அனைவரும் அவருக்கு வீரவணக்கம்' சொல்லி முழக்க மிட்டார்கள். பின்னர், பெரியாரடியான் அவர்களின் உழைப்பையும், சிறப்பையும் நினைவுகூர்ந்து அமைச்சர் அவர்கள் உரையாற்றினார். பேராசிரியரின் துணை வியார் மற்றும் அவரின் குழந்தைகளுக்கு அமைச்சர் அவர்கள் ஆறுதல்
கூறினார்.
தொடர்ந்து கழகக் குடும்பத்தினர் அனைவரையும் தனித்தனியாகச் சந்தித்து நலம் விசாரித்தார், புத்தக விற்பனை நிலையத்திற்குள் சென்று புத்தகங்களை வாங்கியதோடு, பெரியார் மய்யத்தின் அமைப்பையும், செயல்பாட்டையும் பாராட்டினார். 12 மணியளவில் தோழர் கள் அனைவரும் அன்புடன் வழியனுப் பினர்
அடுத்ததாக, நெல்லை மாவட்டச் செயலாளர் ச.இராசேந்திரன், குவைத் செல்லபெருமாள் அவர்களின் படத் தினைத் திறந்து வைத்து, அன்னாரின் தன்னலம் மறந்த கழகப் பணியினையும், அய்யாவிடம் தந்த உறுதி மொழியை மறவாது குவைத் நாட்டில் கழகக் கொள் கைகளை பரப்பிய தொண்டினையும், நலிந்தோர்க்கு உதவிடும் நற்செயலி னையும் பட்டியலிட்டு உரையாற்றினார். பின்னர், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், திருவை ஆறுமுகநயினார் அவர்களின் படத்தினைத் திறந்து உரையாற்றினார்.
இறுதியாக, சி.கிருஷ்ணேஸ்வரி, குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மண்டலத் தலைவர் சு.காசி ஆகியோர் மறைந்து படமாகிப் போ னோரின் தொண்டினைச் சிறப்புடன் எடுத்துக்காட்டி விளக்கவுரையாற்றி னார்கள், செ.செல்லத்துரை நன்றிகூறிட நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
அனைவருக்கும் பேராசிரியர். தி.ப.பெரியாரடியான் குடும்பத்தினர் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வழக்குரைஞர் பா.இராசேந்திரன் குடும்பத்தினர், கரு. மாரியப்பன் குடும்பத்தினர், ஆறுமுக நயினார் குடும்பத்தினர், மாவட்ட இளை ஞரணிச் செயலாளர் த.செல்வராஜ் குடும்பத்தினர், த.பெரியார்தாசன் குடும் பத்தினர், செ.இராசா குடும்பத்தினர், மகளிரணித் தலைவர் ஹேமா குடும் பத்தினர், கோ.முருகன், சு.திருமலைக் குமரேசன், பெ.காலாடி, சு.சுப்புராஜ்,செ. இராதாகிருஷ்ணன், ரெ.சேகர், கோபால் சாமி, மதிவாணன், மோ.அன்பழகன், சொ.பொன்ராஜ், மு.பாலமுருகன், ப பழனிச்சாமி, மு.இராசாமணி, ச.வெங்கட் ராமன், பொ.சக்திவேல், முனைவர் சண்முக சுந்தரம், சங்கரலிங்கம், பெரியார் மய்யக் காப்பாளர் பொ.போஸ், நெல்லை மாநகரத் தலைவர் பி.இரத் தினசாமி, கோயில் பிள்ளை உட்பட நூற்றுக்கணக் கான தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்
கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஏற்று 20.9.2021 அன்று காலை 10.30 மணியளவில் ஒன்றிய பா.ஜ.க. மோடி அவர்களின் மக்கள் விரோத ஆட்சியைக் கண்டித்துத் தூத்துக்குடி, பெரியார் மய்யம் முன்பாகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் மா.பால் ராசேந்திரம் தலைமை ஏற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்.
இப்போராட்டத்தில் மண்டலத் தலைவர் சு.காசி, மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி, லா.விக்டர், பொ.போஸ், பெ.காலாடி, வெற்றி வீரன், அரவிந்தன், மலரவன், முத்துச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment