தைவான் இயந்திரங்கள் குறித்து அறிந்து கொள்ள கருத்தரங்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

தைவான் இயந்திரங்கள் குறித்து அறிந்து கொள்ள கருத்தரங்கு

சென்னை, செப். 28- தைவான் வெளிவர்த்தக மேம் பாட்டு கழகம், ‘இந்தியா வில் பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் காலணி தயாரிப்பு துறைகளில் உள்ள தொழில் வாய்ப்புகள்என்ற தலைப்பில், இணையவழி கருத்தரங்கை நடத்த உள்ளது.

அயல்நாட்டு வர்த்தக பணியகம், தைவான் வெளி வர்த்தக மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து, இந்த கருத்தரங்கை நடத் துகிறது. இந்த கருத்தரங்கு, அக்டோபர் 5ஆம் தேதி அன்று தொ டங்குகிறது. தைவான் நாட்டைச் சேர்ந்த தொழில்துறை வல்லுநர்கள் இக்கருத்த ரங்கின் வாயிலாக, பிளாஸ் டிக், ரப்பர் மற்றும் காலணி தயாரிப்பு துறைகளில் உருவாகி உள்ள நவீன உற்பத்தி தொழில்நுட்பங் களின் சாதகங்கள் மற்றும் இந்தியாவில் இத்துறை களில் உள்ள வாய்ப்புகள் ஆகியவற்றை எடுத்து ரைப்பார்கள்.

இந்த இணையவழி கருத்தரங்கில் பங்கேற்க வும், மற்றும் கருத்தரங்கம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கும்  https://event.taiwantradeshows.com.tw/en/events/42/index.htmlஎன்ற இணைய தளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். பிளாஸ்டிக், ரப்பர், காலணிகள் ஆகியற்றில் உற்பத்திக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. இத்தேவைகளை தைவான் நாட்டின் நவீன இயந்தி ரங்களின் வாயிலாக பூர்த்தி செய்வ தற்கான வாய்ப்பை, இக்கருத்தரங் கம் வழங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment