புதுடில்லி, செப். 28 - இந்தி யாவை நோக்கிய குறிப் பிடத்தக்க நடவடிக்கை யாக, காப்புரிமைகளுக் கான 80 விழுக்காடு கட் டண தளர்வு, கல்வி நிறு வனங்களுக்கும் நீட்டிக் கப்பட்டுள்ளது. காப்பு ரிமை விதிகளில் இது சம் பந்தமான திருத்தங்களை ஒன்றிய அரசு மேற் கொண்டுள்ளது.
அறிவுசார் பொருளா தாரத்தில் புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் படைப் பாற்றலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அண்மைக் காலங்களில் அறிவுசார் சொத்துரிமை சூழலி யலை வலுப்படுத்துவதற் கான முயற்சிகளை இந் தியா அதிக அளவில் எடுத்து வருகிறது.
புதிய கண்டுபிடிப்பு களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக தொழில்துறை மற்றும் கல்வித் துறையுடன் இணைந்து ஒன்றிய அர சின் தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த் தகத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கல்வி நிறுவனங்களில் மேற் கொள்ளப்படும் ஆராய்ச் சிகளை வணிக ரீதியாக மாற்றுவதற்கு வழிவகை செய்வதால் இதனை அடைய முடியும்.
விண்ணப்பங்களின் மீது விரைந்து நட வடிக்கை எடுப்பதற்காக காப்புரிமை விதிகளில் 2016, 2017, 2019 மற்றும் 2020 இல் திருத்தம் மேற் கொள்ளப்பட்டது. விதி களில் மாற்றம் ஏற்பட்டி ருப்பதன் வாயிலாக, பணி கள் குறைவானதாகவும் பயனாளிகளுக்கு உகந்த வகையிலும் இருக்கும்.
No comments:
Post a Comment