இந்தியர்களுக்கு விசா வழங்க மறுக்கும் சீனாவுக்கு இந்தியா எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

இந்தியர்களுக்கு விசா வழங்க மறுக்கும் சீனாவுக்கு இந்தியா எதிர்ப்பு

பெய்ஜிங், செப். 28- உலக அளவில் சீனாவில்தான் முதன்முதலில் கரோனா தாக்கியது. உடனே அங்கு படித்து வரும் 23 ஆயிரத் துக்கு மேற்பட்ட மாணவர்கள், நூற்றுக்கணக்கான தொழிலதி பர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் குடும்பத்துடன் இந்தியா திரும்பினர். பின்னர், இந்தியாவிலும் கரோனா பரவத் தொடங்கி யவுடன் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு வரும் விமான சேவைக்கு சீனா தடை விதித்து விட்டது. இந்தியர்களுக்கு விசா வழங்குவதையும் நிறுத்தி வைத்தது. இதனால், ஒன்றரை ஆண்டுகளாக இந்தியர்கள் சீனாவுக்கு திரும்ப முடியாமல் இந்தியாவிலேயே இருக்கிறார்கள்.

இந்தநிலையில், இந்தியா-சீனா உறவுகள் தொடர்பான 4ஆவது உயர்மட்ட பேச்சுவார்த்தை காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி பங்கேற்றார்.

அவர் பேசியதாவது:- இந்திய மாணவர்கள், தொழிலதிபர் கள், அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோர் சீனாவுக்கு திரும்புவது இருதரப்பு தூதரக நிலைப்பாடு சாராத, மனிதாபிமான பிரச்சினை. அவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவில் தவித்து வருகிறார்கள். இதில், உணர்வுப்பூர்வமான அணுகுமுறை தேவை.

தற்போதைய கருத்து வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், வர்த்தக உறவை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. உதாரண மாக, சீன தொழிலதிபர்கள் இந்தியா வருவதற்கு தொடர்ந்து விசா அளித்து வருகிறது.இருப்பினும், இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள் சந்தித்து வரும் பிரச்சினையில் அறிவியலுக்கு பொருந்தாத அணுகுமுறையை சீனா பின்பற்றுவது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்க துருக்கி முடிவு

அங்காரா, செப். 28- துருக்கி அரசு ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 வகை ஏவுகணை அமைப்பை வாங்கியது. இதற்கு அமெரிக்க அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ரஷ்யாவின் ஏவுகணை பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என அமெரிக்கா தெரிவித்தது. இது தொடர்பாக நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடான துருக்கி மீது, அமெரிக்கா கடந்த ஆண்டு பொருளாதாரத் தடை விதித்தது.

இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஒரு எஸ்400 ஏவுகணை அமைப்பை வாங்க முடிவு செய்திருப்பதாக துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் அறிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்த தகவலை அவர் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாட்ரியட் ஏவு கணையை வாங்குவதற்கான வாய்ப்பு தங்களுக்கு வழங்கப்பட வில்லை என்று தெரிவித்துள்ள அவர், எப்-35 ஜெட் விமானத் திற்கான 1.4 பில்லியன் டாலர்களை துருக்கி அரசு செலுத்தி பிறகும், அமெரிக்கா அதனை இன்னும் தங்களிடம் ஒப்படைக்க வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment