கரோனாவால் மூடப்பட்ட உள்நாட்டு எல்லைகளை மீண்டும் திறக்க பிரதமர் மோரிசன் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

கரோனாவால் மூடப்பட்ட உள்நாட்டு எல்லைகளை மீண்டும் திறக்க பிரதமர் மோரிசன் வலியுறுத்தல்

சிட்னி, செப். 28- ஆஸ்திரேலி யாவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அங் குள்ள மாகாணங்களின் எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து கட்டுப் படுத்தப்பட்டது. மேலும் அந்நாட்டு அரசு மேற் கொண்டு வரும் பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக் கைகள் காரணமாக அங்கு கரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது.

அதிலும் கரோனா வால் அதிகம் பாதிக்கப் பட்ட விக்டோரியா மாகாணத்தில் 26.9.2021 அன்று 779 பேருக்கும், நியூ சவுத் வேல்ஸ் மாகா ணத்தில் 961 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் 51 சதவீதத்திற்கும் அதிகமா னோருக்கு தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத் தப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆஸ் திரேலியாவில் கரோனா வைரஸ் பரவல் காரண மாக மூடப்பட்ட உள் நாட்டு எல்லைகளை கிறிஸ்துமஸ் பண்டிகைக் குள் மீண்டும் திறக்க வேண்டும் என மாகாண மற்றும் பிராந்திய தலை வர்களை அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரி சன் வலியுறுத்தியுள்ளார்.

இதில் குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்தி ரேலியா மாகாணங்கள் தங்கள் எல்லைகளை மீண்டும் திறக்க தயக்கம் காட்டி வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலியாவில் 80 சதவீத மக்களுக்கு தடுப் பூசி செலுத்தப்பட்டுவிடும் என்பதால், அந்த மாகாண அரசுகள் தங்கள் எல்லை களை திறக்க முன்வர வேண்டும் எனவும் பிரத மர் ஸ்காட் மாரீசன் கேட் டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment