திருமங்கலம் அரசு தொகுப்பு குடியிருப்பில் பெரியார் சிலை - பேருந்து நிறுத்தம் சீரமைக்கப்படுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

திருமங்கலம் அரசு தொகுப்பு குடியிருப்பில் பெரியார் சிலை - பேருந்து நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் திருமங்கலம் விருதுநகர் சாலையில்  மேலக்கோட்டை அருகில் தமிழ்நாடு அரசு வழங்கிய தொகுப்பு வீடுகள் உள்ளன.

இப்பகுதிக்கு மின்விளக்கு, பேருந்து நிறுத்தம் அமைத்து "பெரியார் நாகம்மையார் நகர்" என பெயர் சூட்டி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் முழு உருவச்சிலை அமைத்து , பகுதி மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை என அனைத்துசேவைகள் செய்தது மறைந்த கல்வி வள்ளல்  பே. தேவசகாயம் அவர்கள்.

பெரியார் நாகம்மையார் நகரில் உள்ள அய்யாவின் சிலை படிக்கட்டுகள் இல்லாமல் உள்ளது. மேலும் சிலை உறுதித்தன்மை இன்றி விழும் நிலையில் உள்ளது.  அய்யா அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க வசதியில்லாமல் உள்ளது.

எனவே, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தளபதியார் அவர்கள் தந்தை பெரியாரின் சிலைக்குப் படிக்கட்டுகள் அமைத்து, சிலையை உறுதித் தன்மையோடு இருக்க வகை செய்யவேண்டும்

. பேருந்து நிறுத்தத்தில் "பெரியார் நாகம்மையார் நகர்" என பெயர்ப்பலகை வைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் நட வடிக்கை எடுக்கவேண்டும்.

ஏக்கத்தோடு  கழகத்தொண்டன்:

மு. சுந்தரராசன், 

ஒன்றிய தலைவர், திராவிடர் கழகம்,   கரிசல்பட்டி,  திருமங்கலம் 625706,

மதுரை மாவட்டம்

No comments:

Post a Comment