தந்தை பெரியார் பிறந்த நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

தந்தை பெரியார் பிறந்த நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும்

சட்டப்பேரவையில் தி.மு.. உறுப்பினர் கோரிக்கை

சென்னை, செப். 3- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (2.9.2021) புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் முத்துராஜா பேசியதாவது:

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை யில் முத்துலட்சுமி ரெட்டி சிலையையும், புதுக் கோட்டை மாவட்டத்தில் முத்துலட்சுமி ரெட்டிக்கு நினைவு வளாகத்தையும் அமைத்துத் தர வேண்டும்.

தமிழ்நாட்டின் வரலாற்றை, தந்தை பெரியாருக்கு முன் தந்தை பெரியாருக்குப் பின்பு என்று பிரிக்கலாம். அந்த அளவிற்குத் தனது கொள்கைகளாலும், சமூக நீதிக் கோட்பாடுகளாலும் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே மூத்த முன்னோடி மாநிலமாக விளங்கச் செய்தது தந்தை பெரியார் தான்.

அவரின்புகழைப் பரப்பிட அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தந்தை பெரியாரின்பிறந்த நாளை அரசுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment