இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து ஓமனுக்கு பறவைகளை இறக்குமதி செய்ய தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து ஓமனுக்கு பறவைகளை இறக்குமதி செய்ய தடை

மஸ்கட், செப். 28-  ஓமன் வேளாண்மை, மீன் மற்றும் தண்ணீர் வள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் சில பகுதிகளில் இருந்து பறவைகளை இறக்குமதி செய்வதை தவிர்த்துக்கொள்ள கால்நடை பராமரிப்பு ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரை மூலம் இந்தி யாவின் உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்தும், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் பிராந்தியத்தில் இருந்தும் பறவைகளை ஓமன் நாட்டுக்கு இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது மறு அறிவிப்பு வரும் வரை தொடரும். அதுவரை இந்த பகுதியில் இருந்து பறவைகள் மற்றும் அவை சார்ந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment