ராமராஜ்ஜியத்தில் பெண் வன்கொடுமையை விசாரிக்கச் சென்ற பெண் காவலருக்கு இரும்புக்கம்பியால் அடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

ராமராஜ்ஜியத்தில் பெண் வன்கொடுமையை விசாரிக்கச் சென்ற பெண் காவலருக்கு இரும்புக்கம்பியால் அடி

லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் பெண் காவலர் பாதுகாப்புப் பணிக்கு சென்றுகொண்டிருந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரபாத் குமார் என்பவர் அங்கு சென்றுகொண்டு இருந்த பெண்களை பார்த்து  ஆபாச சைகைகளைக் காட்டிக்கொண்டு இருந்தார்இதனைக் கண்ட பெண் காவலர் அவரை எச்சரித்த போது பிரபாத் குமாரும், அவருடன் இருந்த மற்றொரு நபரும் சேர்ந்து  இரும்புக் கம்பியால் அந்தக் காவலரை தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த பெண் காவலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் காவலரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற பிரபாத் குமாரை அருகில் இருந்தவர்கள் துரத்திப் பிடித்துள்ளனர். மற்றொருவர் ஓடிவிட்டார்.

 பெண் காவலரைத் தாக்கியதாக அடையாளம் காணப்பட்டுள்ள அந்த பகுதியை சேர்ந்த பிரபாத் குமார் என்பவர் மீது கொலை முயற்சி,

ஈவ்-டீசிங் மற்றும் பொது ஊழியரை கடுமையாக காயப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 லவ்ஜிகாத்என்ற பெயரில் இஸ்லாமியர்கள் இந்துப்பெண்களுடன் பேசுவதை தட்டிக்கேட்க உத்தரப் பிரதேச காவல்துறையுடன் சேர்ந்த சாமியார் ஆதித்யநாத்தின் யுவ வாகினி என்ற அமைப்பு இஸ்லாமிய இளைஞர்களைத் தாக்கி வருகிறது,

அதே நேரத்தில் ஹிந்துக்கள் ஹிந்துப் பெண்களை கேலிக் கிண்டல் செய்தால் விசாரணை செய்யும் பெண் காவலர்களையே தாக்கி காயப்படுத்துகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறை தற்போது பெண் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கிவிட்டது. இதுதான் ராமராஜ்ஜியம் போலும்! மகா வெட்கக் கேடு!!

No comments:

Post a Comment