“கைவிட்டுப் போனதே கொல்லைப்புறப் பார்ப்பனப் பாரம்பரியம்” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

“கைவிட்டுப் போனதே கொல்லைப்புறப் பார்ப்பனப் பாரம்பரியம்”

பாஜக தமிழ்நாடு பொதுச் செயலா ளரின் பாலியல் காணொலி தொடர்பாக அக்கட்சியின் பார்ப்பன பிரமுகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

 அதில் எஸ்.ஆர்.சேகர் பெயரில் சமூகவலைதளத்தில் பகிரப்படும் பதிவு  முக்கியமானது நமது வீட்டு கொல்லைப்புறங்களில் என்ற ஒரு வார்த்தை குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர்தனது சமூகவலைதளப் பதிவில் தனது கட்சியின் பார்ப்பனத் தலைவரின் ஆபாச காணொலியை வெளியிட்ட நபர் குறித்து கருத்து தெரிவித்த போது, ஒரு காலத்தில் நமது கொல்லைப்புறத்தில் வாங்கிச்சாப்பிட்டவர்கள், இன்று நம்மோடு மோதுகிறார்கள் என்று எழுதியிருந்த பதிவு ஒன்று பகிரப்பட்டுவந்தது,

 இது தொடர்பாக ஒரு வரலாற்றுப் பதிவு

1700-களில் இந்தூரை ஆண்ட ஹோல்கர் வம்சம் ராஜாவின் ஆட்சியில்(ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி ஆட்சிபுரிந்தார்)  ஆய்வாளர் கர்னல் மெக் பரோன் என்பவர் இவ்வாறு எழுதுகிறார்,

 இங்கே சூத்திரர்களுக்கு குளம், குட்டை, கிணறு எங்குமே தண்ணீர் எடுக்க அனுமதி இல்லை. இவர்கள் வயல்வெளிகளுக்குச் சென்றால் அங்கு வாய்க்காலில் செல்லும் தண்ணீரில் கூட கால் நனைக்க அனுமதியில்லை.

அவர்கள் தண்ணீர் தேவைக்கு உயர்ஜாதியினரின் கழிவு நீர் குட்டைகளுக்கு அருகே குழி தோண்டி அதில் சேரும் நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் சில நாட்களில் அந்த குட்டைகளில் பன்றிகள், நாய்கள் படுத்துக் கிடக்கும் சில உயர்ஜாதியினர் வேண்டுமென்றே அந்த குட்டையில் கழிவு நீரை ஊற்றிவிடுவார்கள். இருப்பினும் அந்த மக்கள் அந்த தண்ணீரைத்தான் பயன்படுத்தவேண்டும்.

 இதனால் அவர்களின் பிள்ளைகளும் அவர்களும் தோல் நோய் மற்றும் இதர நோய்களால் மிகவும் மோசமான நிலையில் இருந்தனர்.

பசுக்களுக்கு கொடுக்கும் ரொட்டியைக் கூட அந்த மக்களுக்குத் தரமாட்டார்கள். அவர்களுக்கு என்று உயர்ஜாதியினர் காக்கைகளுக்கு ரொட்டி வைக்கும் வீட்டின் பின்புறம் உள்ள  கல்லில் கோதுமை மாவை வைத்து விடுவார்கள் இவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று அந்த மாவைச் சேகரித்து உணவிற்குப் பயன்படுத்துவார்கள்என்று எழுதியுள்ளார். அதில் தூசி, பறவை எச்சம், எலிஎச்சம் போன்றவைகள் இருக்கும் அந்தக் கொல்லைப் புறப் பெருமை மிகு(?) பார்ப்பனியப் பாரம்பரியம் தகர்ந்துவிட்டதே என்ற ஆதங்கம் மனதில் இன்றும் கொதித்துக் கொண்டு இருந்த காரணத்தால் தான் எஸ்.ஆர்.சேகர் இங்கே இந்த வாசகத்தைப் பயன்படுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment