சமூக வலைதளங்களை மாணவர்கள் கையாள்வதில் கவனம் தேவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

சமூக வலைதளங்களை மாணவர்கள் கையாள்வதில் கவனம் தேவை!

பள்ளிக் குழந்தைகளுக்கான பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற்றது, அதில் பேசிய ஆசிரியர் கூறிய ஒரு நிகழ்வு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவும் வியப்பாகவும், உள்ளது,

 அதாவது பெரும்பாலான குழந்தைகள் இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தளத்தில் கணக்கைத் திறந்து இணையவழியில் பயிலும் தங்களது மாணவர்களுடன்  ஒரு குழுவாக அமைத்து அதில் பொழுதுபோக்குவது, பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் உள்ள முதியவர்கள் பையன் இணையவழி வகுப்பில் படிக்கிறான் என்று நம்பிக்கொண்டு இருக்கும் போது இவன் கேமிராவை அணைத்துவிட்டு இன்ஸ்டாகிராமிலும் யு டியூபிலும் இதர அரட்டைகளிலும் இணையவழியில் ஈடுபட்டு வருகிறான்.  இது எந்த அளவு ஆபத்தானது என்றால் வீட்டில் உள்ள பெரியவர்களின் படங்களையும் இவர்கள் பகிரத்துவங்கி உள்ளனர். சில மோசடிக்காரர்கள் சிறுவர்கள் பெயரில் இது போன்ற குழுமங்களில் புகுந்து வீட்டில் உள்ளவர்களின் படங்களை ரகசியமாக எடுத்து அனுப்பச் சொல்கிறார்கள்.

 சிறுவர்களும் இவர்களின் சூழ்ச்சியைப் புரியாமல் செய்து விடுகிறார்கள்.

 சமீபத்தில் இரண்டு பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்குக் காரணம் இன்ஸ்டாகிராம் மூலம் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் படங்களை அனுப்பச்சொல்லி அதை மாணவர்கள் அனுப்பியது மிக முக்கிய காரணம் ஆகும். ஆகையால் தான் அவர்கள்  இப்போது குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர். ஆகவே பெற்றோர்களே.  உங்கள் குழந்தைகளின் இணையம் வகுப்புகளை நீங்கள் கவனியுங்கள்.  தேவையற்ற ஆப்-களை அவர்கள் தரவிறக்கம் செய்திருந்தால் அதை நீக்கிவிடுங்கள்.  18 வயதுவரை உள்ளவர்களுக்கு சமூகவலைதளப் பயன்பாட்டில் உள்ள ஆபத்து குறித்துத் தெரியாது, ஆகவே அவர்களுக்கு இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் குழு, உள்ளிட்ட சமூகவலைதளப் பயன்பாட்டை நிறுத்திவையுங்கள்.  ஆசிரியர்களால் அறிவுரை மட்டுமே கூற முடியும். ஒவ்வொருவரின் அலைபேசிகளையும் வாங்கி சோதனை செய்ய முடியாது,

 பெற்றோர்களின் அக்கறையின்மையால் தான் இரண்டு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தற்போது சிறையில் உள்ளனர்.

 வருமுன் காப்பது நம் கடமை

  ஆசிரியர்களோடு ஒத்துழைப்பு தாருங்கள், குழந்தைகளின் இணையவழிப் பயன்பாட்டைக் கவனமாகக் கண்காணியுங்கள்.

(டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் 31.08.2021 அன்று வெளிவந்த ஒரு ஆங்கில செய்தியின் தமிழாக்கம்)

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஒரு நகரில் அங்கு வசிக்கும் பெற்றோர் தனது மகள் படிக்கவேண்டும் என்று கூறி விலை உயர்ந்த அலைபேசி மற்றும் அவளுக்கு படிப்பதில் எந்தவித இடையூறுமின்றி படிக்க வேண்டும் என்பதற்காகவே தனி அறை ஒன்றை ஒதுக்கியும் தந்துள்ளனர்..

ஆனால், அந்த சிறுமிக்கோ இது வசதியாக போய்விட்டது.. அந்த அறையில்  தன்னுடைய முழு நிர்வாண படங்களை எடுத்து தனது நண்பர்களின் நச்சரிப்பின் காரணமாக சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அது மட்டுமின்றி தன்னுடைய சொந்தக்கார பெண்ணையும் நிர்வாணப்படங்கள் எடுத்துப் பதிவேற்ற வலியுறுத்தி உள்ளார்... ஆனால், பயந்து போன அந்த பெண், இதைப் பற்றி தன்னுடைய பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தகவல் தந்துள்ளனர்.. இதைக் கேள்விப்பட்டதுமே மாணவியின் அப்பா, அம்மா 2 பேருக்குமே அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment