டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· ராணுவ பயிற்சிக் கல்லூரியின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை, அர்த்தசாஸ்திரா சேர்க்கப்பட திட்டம்.
· மத விழாக்கள், ஊர்வலங்கள் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படியே தடை செய்யப்படுகிறது என தமிழ்நாடு இந்து அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டமன்றத்தில் அறிவிப்பு.
· தலிபான்கள் காட்டுமிரண்டிகள். அவர்களது நடவடிக்கைகள் இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங்தள் போன்றவை என இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவத் அக்தாரின் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· குஜராத் மாநில பாடிடார் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடியாது. அவர்களுக்கு என தனியாக இட ஒதுக்கீடு வேண்டுமானால் தரலாம் என ஒன்றிய சமூக நலத்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே பேச்சு.
· பாதிக்கப்பட்டோர்களை பாதுகாத்திட ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment