தந்தை பெரியார் பற்றியும், திராவிடர் கழகம் பற்றியும் ஒவ்வொரு நாளும் பொய், புரட்டு, அவதூறு களைப் பிரச் சாரம் செய்தே பழக்கப்பட்டுவிட்ட ஹிந்துத்துவாவினர், சமூக ஊடகங்களில் இப் பணியைச் செய்வதற்கென்று தனி 'ஃபேக்டரி'யே நடத்துகின்றனர்.
கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி, தெரிந்தே பொய் களை உற்பத்தி செய்கின்றனர்.
கருப்புச் சட்டை போட்டபடி திராவிடர் கழகத்தினர் அமர்ந்து, பெரியார் உலகம் - பெரியார் சிலைக்காக பூமி பூஜை செய்கின்றனர் என்று ஒரு பொய்ச் செய்தியைப் ஒளிப் படத்துடன் கடந்த இரண்டு, மூன்று நாள்களாக சுற்றில் விட்டுள்ளனர்.
இப்போதல்ல... இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 'பெரியார் பவுண்டேசனுக்கு பூமி பூஜை' என்ற பெயரில் ஹிந்துத்துவவாதிகளால் பகிரப்பட்டு, சமூக ஊடகத்தில் செயல்படும் திராவிடர் கழகத் தோழர்களாலும், உண்மை சரிபார்ப்பு ஊடக (Fact check) நிறுவனங்களாலும் (Youturn, Factcrescendo) பொய் யான தகவல் என்று நிரூபிக்கப்பட்ட அதே படம்தான் மீண்டும் இப்போது சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது.
அப்படி என்றால் அந்தப் படத்தில் பார்ப்பனர்களுடன் அமர்ந்து கருப்புச் சட்டை அணிந்தபடி ஹோமம் வளர்ப்ப வர்கள் யார்?
சொத்துக்குவிப்பு வழக்கில் 2014ஆம் ஆண்டு, செல்வி ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, அந்த வழக்கிலிருந்து விடுதலை பெறு வதற்காக தொடர்ந்து வழிபாடுகள், பூஜைகள், யாகங்களையெல்லாம் அ.தி.மு.க. வினர் செய்து வந்தனர். அப்படி திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் நடத்திய கணபதி ஹோமத்தின் ஒளிப்படம் தான் இது.
2014 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் ‘‘நமது அம்மா'' என்ற இணையதளத்திலும், ‘‘திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில், மக்கள் முதல்வர் ஜெய லலிதா வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி, பிச்சம்பாளை யம் விநாயகர் கோட்டை மாரியம்மன், கன்னீமார், முருகன்-விநாயகர், கருப்பராயன் மற்றும் நவக்கிரக கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி, கணபதி ஹோமம் பூஜை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.ராதா கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்” என்று குறிப்பிட்டு இச்செய்தி வெளிவந்துள்ளது.
இப்படத்தில் இருப்போர் மேற்கண்டோரே ஆவர்.
இது பொய்ச் செய்தி என்று முகநூல் நிறுவனத்தாலும் குறியிடப்பட்டுள்ளது. என்றாலும் வாட்ஸ்அப் வழி இச் செய்திகள் பரவவிடப்பட்டு வருகின்றன.
தேவைப்படின் இது தொடர்பான சட்ட ரீதியான நடவடிக் கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கும்.
- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,
திராவிடர் கழக தொழில்நுட்பக் குழு
குறிப்பு: இதனைத் தோழர்கள் ஆயிரக்கணக்கில் பகிரவும்.
No comments:
Post a Comment