அக்.10 இல் தடுப்பூசி முகாம் - கால அவகாசம் முடிந்த 20 லட்சம் பேருக்கு 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்த முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

அக்.10 இல் தடுப்பூசி முகாம் - கால அவகாசம் முடிந்த 20 லட்சம் பேருக்கு 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்த முடிவு

சென்னை,அக்.7- தமிழ்நாட்டில் வரும் 10-ஆம் தேதி நடைபெறும் மெகா முகாமில் காலஅவகாசம் முடிந்துள்ள 20 லட்சம்பேருக்கு 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் 3 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மய்யங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோ வாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப் பூசிகள் போடப்படுகிறது. தமிழ்நாட் டுக்கு தேவையான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.

இந்நிலையில், கரோனா 3-ஆவது அலை எச்சரிக்கை இருப்பதாலும், கேரளாவில் தினசரி தொற்று அதிகரித் துள்ளதாலும் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட் டுள்ளது. அதன் ஒருபகுதியாக, ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப் பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற 4 முகாம்களில் 87 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

5-ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் வரும் 10-ஆம் தேதி 30 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ளது. அன் றைய தினம் 30 லட்சத்துக்கும் மேற் பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2-ஆம் தவணைகால அவகா சம் முடிந்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் விவரங்களைச் சேகரித்து, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறை திட்ட மிட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா தடுப்பூசியைப் பொறுத்த வரை, 2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். ஒரு தவணை தடுப்பூசி செலுத்தினால், அவை உருமாறக்கூடிய கரோனா வைரசுக்கு எதிராக செயல்படாது. எனவே, பொதுமக்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொள்ள வேண்டும். அப்போதுதான், கரோனா வைரஸுக்கு எதிராக நல்ல பலனை அளிக்கும். கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட் டாலும், தீவிர நோய் பாதிப்பு, உயிரி ழப்பு போன்றவற்றைத் தவிர்க்க முடி யும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், தொற்றைமுழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.

தமிழ்நாட்டில் இதுவரை 4.75கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 2-ஆம் தவணைக்கான கால அவகாசம் முடிந்தும், 20 லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள் ளாமல் உள்ளனர். அவர்களின் விபரங்களைச் சேகரிக்க, அந்தந்த மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் தவ ணையில் கொடுத்த விபரங்கள் அடிப் படையில், அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களிடம் உள்ள தயக்கம், பிரச்சினைகள் குறித்து கேட்கப்படும். மெகா முகாமில், அவர் களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment