மின்சாரம், எரிவாயு ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களுக்கு எரிபொருள் பெட்ரோல் பங்க்குகள் மாற்றப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

மின்சாரம், எரிவாயு ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களுக்கு எரிபொருள் பெட்ரோல் பங்க்குகள் மாற்றப்படும்

இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநர் தகவல்

சென்னை,அக்.7- மின்சாரம், திரவ, இயற்கை எரிவாயு ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பும் வகையில், இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க்குகள் பல எரிபொருள் விற்பனை நிலையங்களாக மாற்றப்படும் என அந்நிறு வன இயக்குநர் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக இந் தியன் ஆயில் நிறுவன இயக் குநர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) எஸ்.எஸ்.வி.ராம குமார் சென்னையில் நேற்று (6.10.2021) செய்தியாளர் களிடம் கூறியதாவது:

எரிபொருள்களை சுத்தி கரிப்புசெய்வதற்காக, பானிபட் மற்றும்பாரதீப் நகரங்களில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கரும்பு, மக்காசோளம், நெல், பருத்தி ஆகியவற்றின் சக்கைகளில் இருந்து தயாரிக் கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்வது வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

அதற்கு ஏற்ற வகையில், தரமான இன்ஜின்களைத் தயாரிக்குமாறு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசுஅறிவுறுத்தி உள்ளது. சுற்றுச்சூழல் மாசு படுவதை தடுக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதி செல வைக் குறைக்கவும், மாற்று எரிசக்தியை ஒன்றிய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

அதன்படி, மின்சார வாக னங்கள், எல்என்ஜி, பிஎன்ஜி, சிஎன்ஜிஆகிய திரவ, இயற்கை எரிவாயுவால் இயங்கக் கூடிய வாகனங்கள் தற்போது அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய வாக னங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட் ரோல் பங்க்குகள் பல எரி பொருள் விற்பனை மய்யங் களாக மாற்றப்படும்.

ஒன்றிய அரசுநிர்ணயம் கச்சா எண்ணெய் விலை பன்னாட்டுஅளவில் நிர்ணயிக்கப்படுவதால், அதற்கேற்ப உள்நாட்டில் சமையல் எரிவாயு உருளை விலையை ஒன்றிய அரசு நிர்ணயிக்கிறது. எனவே, சிலிண்டர் விலை உயர்வுக்கு, எண்ணெய் நிறுவனங்கள் பொறுப்பல்ல. அத்துடன், சிலிண்டருக்கான மானியத் தையும் ஒன்றிய அரசு குறைத்து விட்டது.  இவ்வாறு ராமகுமார் கூறினர்.

No comments:

Post a Comment