முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.17 கடைசி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.17 கடைசி

சென்னை,அக்.7-  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

முதல்முறையாக முதுகலை ஆசிரியர் தேர்வெழுத வயதுவரம்பு கட் டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுப் பிரிவி னருக்கு 40, இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் செயலரை சந்தித்து முறையிட்டனர். தமிழ்நாடு முதலமைச் சரிடம் மனு அளித்தனர்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலை யில், வயது வரம்பு நீக்கப்படுமா என்று 40 வயதைக் கடந்த பி.எட். பட்ட தாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment