சென்னை, அக். 10- மாற்றுத் திறனாளிகளின் வாரிசு களுக்கு பணி நியமன ஆணை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல் வேறு நலத்திட்ட உதவி கள் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு தலைமைச் செய லகத்தில் நேற்று (9.10.2021) நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நலத்திட்ட உதவி களை வழங்கினார்.
அதன்படி 1,228 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட் ரோல் இருசக்கர வாகனம் வழங்கும் அடையாள மாக 5 நபர்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கப் பட்டது. இதே போல் 9,173 பேருக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் விதமாக 5 பேருக்கு மாதம் 1,600 ரூபாய் உத வித்தொகையை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் பணிக் காலத் தில் உயிரிழந்த 4 பணியா ளர்களின் வாரிசுதாரர்க ளுக்கு, கருணையின் அடிப் படையில் பணி நியமன ஆணையையும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
No comments:
Post a Comment