தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா? நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா? நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம்

மதுரை,அக்.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்சு.வெங்க டேசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் 300 நிர்வாக அலுவலர் (பொது) பணியிடங்களை நிரப்பவுள் ளது. இதற்கான அறிவிக் கையை ஆகஸ்டு 24, 2021 அன்று வெளியிட்டது.  இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடை பெறும். முதல் கட்டத் தேர்வு அக்டோபர் 16, 2021 அன்று நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டி ருக்கிறது. விண்ணப்பித் துள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட தேர் வர்களுக்கு தேர்வுக்கு  முன்பாக பயிற்சி தரப் படும். முக்கியமான மய் யங்களில் இந்த வகுப்புகள் நடைபெறும். இந்த முறை இணையத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. மிகவும் ஆர்வத்தோடு தமிழ்நாட் டிலிருந்து விண்ணப்பித் திருந்த தேர்வர்கள் இதில் பங்கேற்றனர். முதல் நாளிலேயே இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தி வழியில் தான் பயிற்சி தரத் துவங்கினர்.  அக்டோ பர் 4 ஆம் தேதி துவங்கிய இந்தப் பயிற்சி தற்போது நடை பெற்று வருகிறது.

தொடர்ந்து இந்தியில் தான் வகுப்புகள் நடக் கின்றன. இது விண்ணப் பித்துள்ள ஆயிரக்கணக் கான தமிழ்நாட்டு மாண வர்களுக்கு எந்தவித பல னையும்தருவதாக இல்லை. இதில் கொடுமை என்னவென்றால், ஆங்கில மொழித்தாளுக் கான பயிற்சி வகுப்பை யும் அவர்கள் இந்தியில் தான் நடத்தியி ருக்கிறார் கள்.  ஆகவே, தேர்வுக்கு முன்பாக, ஒரு குறுகிய காலப் பயிற்சி ஒன்றை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்துள்ள தேர் வர்களுக்கு ஏற்பாடு செய் திட வேண்டும். அதோடு, தேர்வர்க ளுக்குப் புரியும் மொழியில் நடத்திட வேண்டும்  என்றும், வரும் காலங்களில் இத்த கைய நிகழ்வு கள் நேரா வண்ணம் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு கடி தத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment