புதுடில்லி, அக். 10- காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், உள் கட்சி தேர்தல் நடத்துவது, விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து சமீப காலமாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவித்து வரும் சூழலில், 16 ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment