தமிழ்நாட்டில் புதிதாக 1,127 பேருக்கு கரோனா தொற்று உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

தமிழ்நாட்டில் புதிதாக 1,127 பேருக்கு கரோனா தொற்று உறுதி

சென்னை,அக்.25- தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந் துள்ளது. கரோனாவின் 2ஆவது அலை பரவத் தொடங் கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

புதிதாக 1,127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,95,216ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, கோவையில் 128 பேருக்கும், செங்கல்பட்டில் 96 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும், திருப்பூரில் 78 பேருக்கும் உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,019 ஆக உயர்ந் துள்ளது. நேற்று (24.10.2021) ஒரே நாளில் 1,358 பேர் குண மடைந்தனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண் ணிக்கை 26 லட்சத்து 46 ஆயிரத்து 163 ஆக அதிகரித் துள்ளது.

நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை

முதலமைச்சருக்கு குமரி அனந்தன் பாராட்டு

சென்னை,அக்.25- நியாய விலைக் கடைகளில், பனை வெல்லம் விற்பனையை

துவக்கி வைத்த முதலமைச்சர் மு..ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் மூத்த தலை வர்  குமரி அனந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கற்பகம் என்ற பெயரில் பனை வெல்லத்தை நியாய விலை கடைகளில் விற்பனை செய்யும் நடைமுறையை ராமநாதபுரம் சாயல்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளது மிகவும் பாராட்டத் தக்கதாகும். கற்பகம் எனப்படும் கருப்புக்கட்டியில் மனித ரத்தத்தை அபிவிருத்தி செய்யும் தயமின், ரிபோபிளேவின் என்ற பி வைட்டமின்களும் அஸ்கார்பிக் ஆசிட் என்ற

சி வைட்டமினும் இருக்கின்றன. இவை மனித உடல் வளர்ச்சிக்கு மிக தேவையானவை. நியாயவிலை கடை மூலம் இவை எல்லா மக்களையும் சென்றடைந்து விடும்.

இதேபோல் வேம்பு, கற்றாழை மற்றும் மூலிகைகளால் ஆன சோப்பு தயாரிப்பது மக்கள் நலன் கருதி செய்யப்படும் நற்காரியங்களாகும். இவற்றிற்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்துள்ளதை பெரிதும் வரவேற்கிறேன். இயற்கையோடு இணைந்து மனித வாழ்வின் மேம்பாட்டை நோக்கிச்செல்லும் செயல்களாகும். தமிழ்த்தறி என்ற தலைப்பில் ஆரணி, சேலம், கோவை, சின்னாளப்பட்டி, திண்டுக்கல், பரமக்குடி ஆகிய ஊர்களில் நெய்யப்படும் புகழ்பெற்ற, பாரம்பரிய பட்டுச்சேலைகளும், ஜமுக்காளம், காஞ்சிபுரம் பட்டுப்பாவாடை, சட்டை ஆகியவை விற் பனைக்கு விநியோகிக்கப்பட்டு நெசவாளர்களுக்கு ஊக்கம் அளித்திருப்பதையும் போற்றுகிறேன்.

இந்த முயற்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர்தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் தமிழர்களின் அடையாளம் காக்கப்பட்டு நிச்சயம் உயர்நிலைக்கு செல்கிற வாய்ப்பு ஏற்படும். இத்தகைய முயற்சிகளை மேற்கொண்ட தமிழ் நாடு முதலமைச்சரை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

பொறியியல் படிப்பு

துணை கலந்தாய்வு நிறைவு

95,069 இடங்கள் நிரம்பின

சென்னை,அக்.25- பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு நிறைவடைந்தது. இதையடுத்து மொத்தம் 95,069 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2021-2022 பொதுக் கலந்தாய்வின் நான்கு சுற்று முடிவில் 89,187 இடங்கள் நிரப்பப்பட்டன.

நிரப்பபடாமல் உள்ள பொது, தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு, பொதுக் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத தகுதி வாய்ந்த மாணவர்கள் மற்றும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்விற்கு பொது, தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் என மொத்தம் 9,463 பேர் விண்ணப்பங்களை  பதிவு செய்தனர். அவர்களில் பதிவுக் கட்டணம் செலுத்திய 9,113 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 21 மற்றும் 22ஆம் தேதி என இரண்டு நாட்கள் மாணவர்கள் விரும்பிய பாடம், மற்றும் கல்லூரிகள் தேர்வு செய்ய கால அவகாசம் வழங் கப்பட்டது. இந்தநிலையில் பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு நேற்று (25.10.2021) நிறைவடைந்தது. இதில் 5882 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நான்கு கட்ட கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வு முடிவில் மொத்தம் 95,069 மாணவர்களுக்கு சேர்க் கைக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக் ககம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு 83,396 மாணவர்களுக்கும், 2020ஆம் ஆண்டு 78,682 மாணவர்களுக்கும், நடப்பு ஆண்டில் 95,069 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட் டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான இளங் கலை கட்டட கலை படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு 25.10.2021இல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு வருகிற 27ஆம் தேதி மாலை 7 மணி வரை விரும்பிய பாடம் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் தரப்படும் என்றும் வருகிற 29ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுப்பிரிவினருக்கு வருகிற 29 மற்றும் 30ஆம் தேதிகளில் விரும்பிய பாடம் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் தரப்படும்  என்றும் நவ.1ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment