சிவகிரி, அக்.25 வாசுதேவ நல்லூர் அருகே சாலை அமைக்க மண் எடுத்த போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான பொருட்கள் கண்டெடுக்கப் பட்டு உள்ளன.
தென்காசி மாவட்டம் வாசு தேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் கிராமம் குலசே கரப்பேரி குளத்துக் கரையின் வடபகுதியில், தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்த மான நிலத்திற்குச் செல்வ தற்காக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக அப்பகுதியில் மண் எடுத்த போது 4 அடி ஆழத்தில் உருளைக் கற்கள் கிடந்தன. தொடர்ந்து தோண்டி மீண்டும் மண் எடுத்த போது பழங்கால மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பால் செய்யப் பட்ட வில், குத்தீட்டி, வாள், கத்தி, செம்பினால் செய்யப் பட்ட பாத்திரங்கள் புதைந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து பழங்கால பொருட் கள் அனைத்தும் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன.
இதுபற்றி தகவலறிந்த குற்றாலம் தொல்லியல் துறை அலுவலர் அரி கோபால கிருஷ்ணன், பழைமையான பொருட்கள் கிடைத்த பகு தியை நேரில் பார்வையிட்டார். அங்கு கிடைக்கப் பெற்ற பண்டைய கால பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய் தார். பழங்கால பொருட்கள் கிடைத்தது பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல் லப்படும். தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை பெற்று அடுத்தக் கட்ட பணிகள் மேற்கொள் ளப்படும் என்றும் அரி கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.
பழங்கால பொருட்கள் அனைத்தும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கூறப்படுகிறது.
அனைத்துப் பொருட்களும் வேலை நுணுக்கம் மிக்கவை யாக உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் வாழ்ந்த மக் களின் நாகரிக வாழ்க்கை துல்லியமாக வெளிப்படுகிறது. ஏற்கெனவே இப்பகுதியில் ஆற்றோரங்களில் பண்டைய கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என செவி வழிச்செய்திகள் கூறப்பட்டு வருகின்றன. இதனை உண்மையாக்கும் வகையில் தற்போது பண்டைய கால பொருட்கள் கிடைக்கப் பெற் றுள்ளன. எனவே இப் பகுதியில் தொல்லியல் துறை யினர் ஆய்வு மேற்கொண்டு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்த மக்களின் வாழ் க்கை முறையை வெளிப்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
No comments:
Post a Comment