சென்னை,அக்.25- மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு போக்குவரத்துப்படி வழங்கலாம் என்று மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலர் (நிதித் துறை) எஸ்.கிருஷ்ணன், அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
அரசுப் பணியாளர்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் பணிக்கு ஏற்றபடி மாதந்தோறும் ஊர்திப்படி (போக்குவரத்துப்படி) வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வழங்கப்படும் போக்குவரத்துப்படியில் பிடித்தம் செய்யப்படுவதாக மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்செயல் விடுப்பு தவிர பள்ளிக்கல்வியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் காலாண்டு, அரை யாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்கள் பணிக்காலமாக கருதப்படுவ தால் பார்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு போக்கு வரத்துப்படி வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment