69 விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

69 விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை,அக்.25- தமிழ்நாட்டில் 69 விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.

உலக போலியோ தினத்தை முன் னிட்டு, நேற்று (24.10.2021) காலை சென்னை ராணி மேரி கல்லூரி அருகே போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சைக்கிள் பிரச்சாரப் பயணத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

அப்போது, அமைச்சர்  மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

போலியோ ஒழிப்பு மருந்தைக் கண்டுபிடித்த ஜோனாஷ் சால்க் பிறந்தநாளில் போலியோ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னையில் சைக்கிள் பிரச்சார பயணம் நடக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த23ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் நடை பெற்ற மெகா முகாமில் 23 லட்சத்து 27,907 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதில் இரண்டாவது தவணை தடுப்பூசியை 14 லட்சத்து 68,457 பேரும் முதல் தவணை தடுப்பூசியை 8 லட்சத்து 59,450 பேரும் செலுத்திக் கொண்டனர்.

இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 18 வய துக்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 69 சதவீதத்தி னரும், இரண்டாவது தவணை தடுப் பூசியை 29 சதவீதத்தினரும் செலுத்திக் கொண்டுள்ளனர். இந்திய அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை சதவீத அடிப்படையில் இது குறைவு என்றாலும், மிக விரைவில் தேசிய அளவிலான இலக்கை எட்டு வோம். தற்போது 43 லட்சம் தடுப் பூசிகள் கையிருப்பில் உள்ளன.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment