சென்னை,அக்.14- தமிழ்நாட்டில் புதிதாக 1,280 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில்
நேற்று ஆண்கள்743, பெண்கள் 537 என மொத்தம் 1,280 பேர்
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 173, கோவையில் 145, செங்கல்பட்டில் 98 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம்
தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 82,137-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 26 லட்சத்து
30,654 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று (13.10.2021) மட்டும் 1,453 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர்.
தமிழ்நாடு
முழுவதும் 15,650 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியோர் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,833-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்
மட்டும் 8,513 பேர் இறந்துள்ளனர் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment