உலக வெப்பமயமாக்கல்; சுமார் 14 விழுக்காடு பவளப் பாறைகள் அழிவு: ஆய்வில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

உலக வெப்பமயமாக்கல்; சுமார் 14 விழுக்காடு பவளப் பாறைகள் அழிவு: ஆய்வில் தகவல்

லண்டன், அக். 7- பவளப் பாறைகள் ஆரோக்கிய அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

தெற்காசிய, பசிபிக், அரேபியன் பெனிசிலா, ஆஸ்திரேலியா ஆகிய கடல் பகுதிகளில் உள்ள பவளப் பாறைகள் உலக வெப்பமயமாக்கல் கார ணமாக அழிந்து வருகின் றன. 10 ஆண்டுகளில் அதாவது 2009 - 2018ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சுமார் 14% பவளப் பாறைகள் உலக வெப்பமயமாக்கல் கார ணமாக அழிந்துள்ளன.

இந்த நிலை மேலும் தொடர்ந்தால் நீருக்கடி யில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் இறக்கக் கூடும். காலநிலை மாற்றம் தற்போது பெரும் அச் சுறுத்தலாக உள்ளது. 73 நாடுகளில் 12,000 பகுதி களில் பவளப் பாறைகள் அழிந்துள்ளனஎன்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகள் கால நிலை மாற்றம் குறித்த உடனடி நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று அய்க்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் செயற்பாட் டாளரான கிரெட்டா துன்பெர்க்கும் இதையே தான் வலியுறுத்தி வருகிறார்.

காலநிலை மாற்றத் தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகி யவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு அய் ரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் கால நிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.

எனவே, உலக வெப்ப மயமாக்கலைத் தடுக்க, வளர்ந்த நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment