40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தால் மனிதர்கள் வசித்த குகை கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தால் மனிதர்கள் வசித்த குகை கண்டுபிடிப்பு

துபாய், அக். 7- பல லட்சம் ஆண்டு ரிணாம வளர்ச் சியில் பல்வேறு உயிரினங் கள் அடியோடு  அழிந்து போய் விட்டன. அப்படி அழிந்த இனம்தான் நியாண்டர்தால் மனிதர் கள். பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் ஆதி காலத்தில் வாழ்ந்தஇந்த நியாண்டர்தால் மனிதர் கள் பூமியில் வாழ்ந்தனர்.

40,000 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தஒரு குகை ஒன்று பிரிட்டன் ஜிப்ரால்டர் பகுதியில் உள்ளவான்கார்ட் குகைபகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இங்கு கிடைத்த தொல் பொருள் கள் மூலம்பண்டைய காலத்தில் நியாண்டர் தால் எனும் மனித இனம் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் கிடைக்கலாம்என ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர். 

ஜிப்ரால்டர் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் கிளைவ் ஃபின் லேசன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற் கொண்ட போது இந்த குகை பகுதியை கண்டு பிடித்தனர்.  ‘43 அடி நீளம் கொண்ட இக்குகை யின் உள்ளே விசித்திர மான பொருள்கள் தொங் குவதை பார்த்தனர். குகை அறையின் மேற்பரப்பில் கழுதைப்புலிகள் மற்றும் கழுகுகளின் எச்சங்களை யும், கடல் நத்தையையும்  4 வயது நியாண்டர்தால் மனித பல் ஒன்றையும்கண்டுபிடித்தனர். இது கோர்ஹாமின் குகை வளாகம் என்று அழைக் கப்படுகிறது,  சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் கள் அழிந்துபோவதற்கு முன்பு வாழ்ந்த கடைசி இடங்களில் ஒன்றாக இந்த குகை இருந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment