பைசர் தடுப்பூசியால் டெல்டா வைரசுக்கு எதிராக 90 சதவீத செயல்திறன்: ஆய்வில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

பைசர் தடுப்பூசியால் டெல்டா வைரசுக்கு எதிராக 90 சதவீத செயல்திறன்: ஆய்வில் தகவல்

வாசிங்டன், அக். 7- கரோனா வைரஸ் பெருந்தொற் றுக்கு எதிராக அமெரிக் காவில் பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப் பூசி, டெல்டா வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் நன்றாக வேலை செய் கிறது என்பது அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக 2 பைசர் தடுப்பூசிகள் போட்ட பின்னரும் டெல்டா வைரஸ் உள்பட அனைத்து உருமாறிய வைரஸ்கள் பாதித்தாலும்கூட, மருத் துவமனைகளில் சேர்க்கப் படுகிற நிலையை குறைந் தது 6 மாதங்களுக்கு தடுக்கிறது. அதுவும் 90 சதவீத செயல்திறனை கொண்டிருக்கிறது. இருந் தாலும் தடுப்பூசிகள் போட்ட ஒரே மாதத்தில் செயல்திறன் 2 சதவீதம் குறைந்து விடும், 6 மாதங் களில் 47 சதவீதமாகி விடும் என்றும் தெரிய வந்துள்ளது.

ஆய்வாளர்களில் ஒருவரான சாரா டர் டாப் இதுபற்றி கூறுகை யில், “எங்கள் ஆய்வானது கடுமையான நோய்களை யும், பெருந்தொற்றுகளை யும், மருத்துவமனைகளில் சேர்க்கைகளையும் தடுப் பதில் தடுப்பூசிகள் முக் கிய கருவிகளாக செயல் படும், டெல்டா உள்பட உருமாறிய வைரஸ்களுக் கும் இது பொருந்தும் என்று காட்டுகின்றனஎன தெரிவித்தார். இந்த தகவல்கள், ‘தி லேன்செட்பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment