சென்னை, அக். 16- தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணம் நகராட்சியுடன் தாராசுரம் பேரூராட்சி மற்றும் 13 கிராம ஊராட் சிகளை இணைத்து கும்ப கோணம் மாநகராட்சி யாக தரம் உயர்த்துவதற் கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல் வேறு மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும், நகராட்சிகளை மாநக ராட்சிகளாக விரிவாக் கவும், பேரூராட்சிகளை இணைத்து புதிய நக ராட்சிகளாக்கவும் பல் வேறு அறிவிப்புகள் சட் டப்பேரவையில் வெளியிடப்பட்டன. அது தொடர் பான அரசாணைகள் தற் போது வெளியிடப்பட்டு உள்ளன.
அதன்படி, கும்ப கோணம் நகராட்சியுடன் தாராசுரம் பேரூராட்சி மற்றும் வலையப்பேட்டை, அண்ணலக்ரகாரம், பாபுராஜபுரம், அரூர், பழவாத்தான்கட்டளை, கொரநாட்டு கருப்பூர், சாக்கோட்டை, பெருமாண்டி, உள்ளூர், உமாமகேஸ்வரபுரம், தேப்பெருமாநல்லூர், ஏரகரம், மலையப்பநல் லூர் ஆகிய 13கிராம ஊராட்சிகளையும் இணைக்க ஆணையிடப் படுகிறது என குறிப்பிடப் பட்டுள்ளது.
இவ்வாறு இணைக்கப் படுவதன் மூலம் 12.58 சதுர கி.மீ.பரப்பளவு கொண்ட கும்பகோணம் நகராட்சி, 42.95 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மாநகராட்சியாக மாற உள்ளது.
கன்னியாகுமரி
இதேபோன்று, கன் னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட் சியுடன் 2 பேரூராட்சிகள், 6 ஊராட்சிகள் முழு மையாகவும், தர்மபுரம், ராஜக்கமங்கலம் ஆகிய ஊராட்சிகள் பகுதியாக வும் இணைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே மாவட் டத்திலுள்ள கொல்லங் கோடு, ஏழுதேசம் ஆகிய பேரூராட்சிகளை இணைத்து நகராட்சியா கவும், கரூர் மாவட்டம் புஞ்சை புகளூர் மற்றும் காகித ஆலை புகளூர் ஆகிய பேரூராட்சிகளை இணைத்து புகளூர் நக ராட்சியாக அமைக்கவும் உத்தேச முடிவு எடுக்கப் பட்டு அரசாணை பிறப் பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
இதுமட்டுமல்லாது சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருச்சி மாவட்டம் முசிறி, லால்குடி பேரூராட்சிகள் மற்றும் சேலம் மாவட்டம் தாரமங்கலம், இடங்கண சாலை ஆகிய 5 பேரூ ராட்சிகளையும் நகராட் சிகளாக உருவாக்க உத் தேச முடிவு எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக் கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்
மேலும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருநின்றவூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வடலூர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட் டினம், தூத்துக்குடி மாவட் டம் திருச்செந்தூர், கோவை மாவட்டம் கருமத்தம் பட்டி, காரமடை, கூட லூர், மதுக்கரை, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, திருப்பூர் மாவட்டம் திரு முருகன்பூண்டி ஆகிய 12 பேரூராட்சிகளை நக ராட்சிகளாக மாற்றவும் அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இதேபோன்று நாகர் கோவில் மாநகராட்சி யுடன் 2 பேரூராட்சிகள், 6 ஊராட்சிகள் முழு மையாகவும்; தர்மபுரம், ராஜக்கமங்கலம் ஆகிய ஊராட்சிகள் பகுதியாக வும் இணைக்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment