சென்னை, அக். 16- நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சிப் பதவிகளில் 91 சதவீத இடங்களை திமுக பிடித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணை யம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவி களுக்கான இடைத் தேர் தல் வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் 2 கட்டங் களாக நடந்தன. கடந்த 12ஆம் தேதி வாக்கு எண் ணிக்கை நடைபெற்றது. 9 மாவட்டங்களில் 13ஆம் தேதியும் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அன்று இரவும் முழுமையான வெற்றி விவரம் கிடைக் காத நிலை இருந்தது.
இந்நிலையில், வெற்றி விவரங்களை <https://tnsec.tn.nic.in> என்ற இணையதளத்தில் மாநில தேர்தல் ஆணை யம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 9 மாவட்டங் கள் மற்றும்இதர மாவட் டங்களில் நடந்த தேர்த லில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களில் 139 இடங்களையும் (90.85%), ஊராட்சி ஒன் றிய உறுப்பினர் இடங்க ளில், 978 இடங்களிலும் (68.82%) திமுக வெற்றி பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக, 1.31% மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களிலும், 14.94% ஊராட்சி ஒன்றிய இடங் களிலும் வெற்றி பெற்று உள்ளது.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தல் வெற்றி 100 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளதா கவும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேர்தலில் 0.28 சதவீதம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், 9 மாவட்டங் களில் திமுக மற்றும்அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற் றுள்ளன. திமுக மட்டும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக் கான 126 இடங்களிலும், ஊராட்சி ஒன்றிய உறுப் பினர் பதவிகளில் 941 இடங்களிலும் பெரும் பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
இதன் காரணமாக அனைத்து மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி களை திமுகவே கைப்பற் றும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கான தேர்தல் வரும் 22ஆம் தேதி நடக்க உள்ளது.
No comments:
Post a Comment