கின்ஷாசா, அக். 11 மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், காங்கோ ஆற்றில் சென்று கொண் டிருந்தன. படகுகளில் 200-க்கும் அதிகமானோர் பயணம் செய்த னர்.
வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்த போது, எதிர்பாராதவிதமாக பட குகள் கவிழ்ந்தன. இதில் படகுகளில் பயணம் செய்த 200-க்கும் அதிக மானோர் நீரில் மூழ்கினர்.
தகவலறிந்து வந்த மீட்புக் குழு வினர் மீட்புப்பணியில் ஈடுபட் டனர். நீரில் தத்தளித்துக் கொண் டிருந்த 39 பேரை உயிருடன் மீட் டனர். மேலும் 61 பேரின் உடல் களை மீட்புக் குழுவினர் மீட்டுள் ளனர். 100-க்கும் அதிகமானோரின் நிலைமை தெரியவில்லை. அவர் கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நீரில் மூழ்கி காணா மல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
No comments:
Post a Comment