புதுச்சேரி அரசின் 2022ஆம் ஆண்டு விடுமுறைப் பட்டியல் - மே 1, காந்தி பிறந்தநாள் அரசு விடுமுறைகள் ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 13, 2021

புதுச்சேரி அரசின் 2022ஆம் ஆண்டு விடுமுறைப் பட்டியல் - மே 1, காந்தி பிறந்தநாள் அரசு விடுமுறைகள் ரத்து

புதுச்சேரி, அக். 13- 2022ஆம் ஆண்டு புதுவை அரசு விடுமுறை பட்டியலில் இருந்து மே 1ஆம் தேதி மற்றும் காந்தி பிறந்த நாள் நீக்கப்பட்டுள்ளன. இதில் மே 1 விடுமுறையை சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறைக்கு ஏஅய்யூடியூசி தொழிற்சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஆண்டுதோறும் அரசு விடுமுறை நாட்கள் பட்டியலை புதுவை அரசு வெளியிடும். அதன்படி 2022ஆம் ஆண்டுக் கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

அரசு சார்புச் செயலர் கிரண் இதுதெடர்பாக வெளியிட்ட உத்தரவில், புதுச்சேரியில் மே 1, அக்டோபர் 2 ஆகிய இருநாட்கள் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் அரசு விடு முறை பட்டியலில் இருந்து அந்த நாட்கள் விடுவிக்கப்பட்டு உள்ளன. துணைநிலை ஆளுநர் உத்தரவுப்படி இவ்வுத்தரவு வெளியிடப்படுகிறதுஎன்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி சரி செய்யக் கோரி ஒன்றிய உள்துறைச் செயலர், துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு புதுவை ஏஅய்யூடியூசி செயலாளர் சிவக் குமார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டு, அன்று நாடு முழுவதும் விடு முறை அளிக்கப்படுகிறது. பெரும்பான்மையான நாடுகளில் கடைப்பிடிக்கும் நிகழ்வு இது.

இந்நிலையில் புதுவை அரசு 2022ஆம் ஆண்டு விடுமுறை தின பட்டியலில் தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அன்று விடுமுறை அளிக்கவில்லை. புதுவை அரசின் இச்செயலை தொழிற்சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த ஆண்டுகளைப் போல 2022ஆம் ஆண்டிலும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தின விடுமுறை அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக உள்துறை செயலர், ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்று குறிப்பிட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சியும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தின விடுமுறையை அறிவிக்க வலியுறுத்தியுள்ளது.

அதிகாரிகள் விளக்கம்

இதுபற்றி அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: அரசு விடுமுறை நாட்களை அதி களவாக 16-தான் அறிவிக்க முடியும். அதன்படி 2022ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியாகி யுள்ளது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில், அதாவது மே 1இல் வரும் தொழிலாளர் தினம், அக்டோபர் 2இல் வரும் காந்தி ஜெயந்தி ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

அதேநேரத்தில், உணர்வுபூர்வமானது என்பதால் மதம் சார்ந்த மத விழாக்களான பக்ரீத், கிறிஸ்துமஸ் ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தாலும் அரசு விடுமுறை பட்டியலில் இணைத்துள்ளோம். ஒவ்வெரு ஆண்டும் சில விடுமுறைகள் ஞாயிறன்று வந்தாலும் இதேபோல் நட வடிக்கை எடுப்பது வழக்கம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அக்டோபர் 18ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை முழு அளவில் இயங்க அனுமதி!

புதுடில்லி, அக்.13 வரும் 18ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை உச்ச வரம்பு இன்றி, முழு அளவில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக நாடு போராடும் வேளையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் கரோனா தொற்று பரவல் குறையத்தொடங்கி படிப்படியாக விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது விமானங்கள், கரோனாவுக்கு முந்தைய சேவையில் 85 சதவீத சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்போது கரோனா தொற்று பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் விமானங்களில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். விமான சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது. உள்நாட்டு விமான சேவையை முழுத்திறனுடன் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், வரும் 18ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை உச்ச வரம்பு இன்றி, முழுத்திறனுடன் இயங் குவதற்கு அனுமதிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் விமானங்களை முழுமையாக இயக்கு கிறபோது, கரோனா கால கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படு வதை உறுதி செய்யவும், பொருத்தமான விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யவும் விமான நிறுவனங்களும், விமான நிலையங்களை இயக்குவோரும் உறுதி செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர். விமானங்கள் முழுத்திறனுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், விழாக் காலத்தில் கட்டணங்கள் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சாமியார் ராம் ரகீம் மீதான கொலை வழக்கு 18 ஆம் தேதி தண்டனை அறிவிப்பு

புதுடில்லி, அக். 13- பாலியல்வன்கொடுமை க்குற்றவாளி சாமியார் ராம் ரகீம் மீதான கொலைக் குற்றத்துக்கு வரும் 18ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்பட உள்ளதாக சிபிஅய் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ராம் ரகீம் தேரா சச்சா சவுதா என்னும் அமைப்பின் தலைவராக இருந்து வந்தார்.  இவர் சிர்சாவில் ஆசிரமம் நடத்தி வந்தார்.   அங்கு ஏராளமான முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.

அவற்றில் இவர் சிறுமிகளை பாலியல்வன்கொடுமை செய்த வழக்கில் இவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  கடந்த 2002ஆம் ஆண்டு ராம் ரகீமின் ஆசிரம மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இதையொட்டி  தொடரப்பட்ட வழக்கில் ராம் ரகிம் உள்ளிட்ட 5 பேர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டது.  நேற்று (12.10.2021) இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இதை அறிவித்த சிபிஅய்  நீதிமன்றம் இதற்கான தண்டனை விவரம் அக்டோபர் 18 அன்று அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment