சென்னை, அக். 13- திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில், ரூ.1,200 கோடியிலான பல்முனைய சரக்குப் போக்குவரத்து பூங்கா வுக்கான ஒப்பந்தம் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிதின் கட்கரி உள்ளிட்ட ஒன் றிய அமைச்சர்கள் முன்னிலை யில் கையெழுத்தானது.
தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் தேசியநெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம், சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து பொது மற்றும் தனியார் பங் களிப்புடன் திருவள்ளூர் மாவட் டம் மப்பேட்டில், ரூ.1,200 கோடி முதலீட்டில், ‘பல் முனைய சரக்குப் போக்குவ ரத்து பூங்கா’வை தொடங்கு கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை தலை மைச் செயலகத்தில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தா னது. இந்த நிகழ்ச்சியில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:
திருவள்ளூர் மாவட்டத் தில்158 ஏக்கர் பரப்பில் ரூ.1,200 கோடிதிட்ட மதிப்பில் இந்த பூங்காஅமைக்கப்படுகிறது. இது அமையும் பகுதி மிக முக்கியமான தொழில்பகுதி. பெரிய தொழிற்சாலைகள் திர ளாக அமைந்துள்ள சிறீபெரும் புதூர், பிள்ளைப்பாக்கம், ஒர கடம் ஆகிய பகுதிகளுக்கு மிக அருகில் இந்த பூங்கா அமைய உள்ளது.
இப்பூங்கா சென்னை எல்லை சுற்றுவட்டச் சாலைக்கு மிக அருகில் உள்ளது. சென்னை விமான நிலையம், சென்னை துறைமுகம், காமராஜர் துறை முகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகியவற்றை சிறப் பான முறையில் இணைக்க வழி செய்கிறது. அனைத்து வச திகளும் கொண்ட இடத்தில் அமையும்இப்பூங்காவில், உலகத் தரம் வாய்ந்த வசதி களும் உள்ளன.
ரயில் மற்றும் சாலை இணைப்புகளுடன் சரக்கு முனையம், சேமிப்புக் கிடங்கு, குளிர்பதன சேமிப்புக்கிடங்கு, இயந்திரங்கள் மூலம் சரக்கு களை கையாளுதல், மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளான சுங்க அனுமதி பெறுதல், சோதனை வசதிகள் போன்ற உலகத் தரம் வாய்ந்தவசதிகள் அனைத்தும் இப்பூங்காவில் அமைக்கப்பட இருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
இதன்மூலம் சரக்குப் போக் குவரத்துச் செலவு கணிசமான அளவில்குறையும். சரக்குப் போக்குவரத்து உட்கட்ட மைப்பை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தொடங்கியுள் ளோம். சரக்குப் போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில், ‘தமிழ்நாடு மாநில சரக்குப் போக்குவரத்துக்கான திட் டத்தை தயாரிக்கும் முயற்சி களை தமிழ்நாடு அரசு மேற் கொண்டுள்ளது. இதற்கென டிட்கோ சார்பில் ஒரு ஆலோ சகர் நியமிக்கப்பட்டு, திட் டத்தை விரைவில் வெளியிட உள்ளோம்.
இந்த புதுமையான முயற் சியின் காரணமாக தமிழ் நாட்டில் உள்ள 10 ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்த தருணத்தில் தமிழ் நாட்டில் சரக்குப் போக்குவ ரத்து துறைக்கு உதவ வேண்டும் என்று ஒன்றிய அமைச்சருக்கு சில கோரிக்கைளை முன் வைக்கிறேன்.
தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தால் அமைக்கப்படும் பெங் களூரு - சென்னை விரைவுச் சாலையை சென்னை விமான நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.
கோயம்புத்தூர், தூத்துக் குடியில் இதுபோன்ற பல் முனைய சரக்குப் போக்குவ ரத்து பூங்காக்கள் அமைக்கப் பட வேண்டும். இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரும்.
இப்பூங்காவில் ரயில்வே துறையின் பங்களிப்பையும் பெற்றுத்தரவேண்டும். திட்டத்தை தமிழ்நாட்டுக்கு வழங்கியதற்காக ஒன்றிய அமைச்சருக்கு நன்றி.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
காணொலியில் ஒன்றிய அமைச்சர்கள்
ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கப்பல் போக்குவரத்து அமைச் சர் சர்வானந்த சோனோவால், நெடுஞ்சாலைத் துறைஇணை அமைச்சர் வி.கே.சிங் டில்லியி லிருந்து காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment