குப்பை கொட்டியவர்களிடம் ரூ.22 லட்சம் அபராதம் வசூல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

குப்பை கொட்டியவர்களிடம் ரூ.22 லட்சம் அபராதம் வசூல்

சென்னை, அக். 25- பொது இடங்களில் குப்பை மற் றும் கட்டுமான கழிவுக ளைக் கொட்டிய நபர்களி டம் இருந்து சென்னை மாநகராட்சியால் ரூ.22 லட்சம் அபராதம் வசூ லிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று (24.10.2021) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக் கும் வகையில்பொது, தனி யார் இடங்களில் குப் பையை தூக்கி எறிபவர் கள் மீதும், கட்டுமானக் கழிவுகளை பொது இடங் களில் கொட்டுபவர்களின் மீதும் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணைவிதிகள் 2019இன் படி அபராதம்விதிக்கப்படும்.

இதன்படி, கடந்த 11ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.11,53,600 அபராதமும், பொதுஇடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.11,12,400 அபராதமும் என மொத்தம் ரூ.22,66,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சியில் பொது இடங்களிலும் நீர்வழித் தடங்களிலும் குப்பை களை வகைபிரித்து வழங் கவும், கட்டுமானக் கழிவு களை பொதுஇடங்களில் கொட்டுவதை தவிர்த்து மாநகராட்சி ஏற்கெனவே அறிவித்துள்ள இடங் களில் கொட்டவும் கேட் டுக் கொள்ளப்படுகிறார் கள். இவ்வாறு அந்த செய் திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment