சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினராக மருத்துவர் சாந்தி நியமனம் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினராக மருத்துவர் சாந்தி நியமனம் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு

சென்னை, அக். 25- சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினராக மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் நிய மிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர்ர் மு..ஸ்டாலின் அறிவித் துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (24.10.2021) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக அமைக் கப்பட்டுள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவில், மாணவர் சமுதாயத்துக் கான சமூக நீதி, மகளிர் உரிமை, பெண்களுக்குச் சமூகப் பங்களிப்பில் அதி காரமளித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் துவதில் மிகுந்த ஆர்வ மும், ஈடுபாடும் கொண் டுள்ள மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்தை உறுப் பினராக நியமித்து முதல மைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment