இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 23 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 23 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தல்

சென்னை, அக். 16- இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரைப் பேட்டை, சாமந்தான்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 23 மீனவர்கள், சிவனேசன், சிவக்குமார் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப் படகுகளில் கடந்த 11ஆம்தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள், 13ஆம் தேதி இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். படகுகளில் இருந்த 23 மீனவர்களையும் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்குஅழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கரோனா பரிசோதனைக்குப் பிறகு மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு..ஸ்டா லின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த அக்.11ஆம் தேதி நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், 13ஆம் தேதி பாரம்பரிய மீன்பிடித்தளமாக உள்ள பருத்தித் துறை அருகில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப் பட்டனர். அவர்களை காரைநகர் கடற்படைத்தளத்துக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத் தக்கது.

இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு நிரந்தர மாக தீர்க்க உறுதியான வழிமுறைகளை காண வேண்டும். இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச் சினையை இலங்கை அதிகாரிகளிடம் உறுதியான, தீர்க்க மான முறையில் எடுத்துச் செல்ல இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தாங்கள் உரிய வழிமுறைகளை கையாண்டு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள மீனவர்களின் உறவினர்களை தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி .கே.எஸ்.விஜயன் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

மெரினாவில் உயிரிழப்பை தடுக்க உயிர்காப்பு பிரிவு தொடக்கம்

சென்னை, அக். 16- முதலமைச்சர் மு..ஸ்டாலின் சட்ட மன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை மானியக் கோரிக்கையின்போது சென்னைமெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகளை தடுக்க சென்னை காவல் துறையில் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவு ஆரம் பிக்கப்படும்என அறிவித்திருந்தார்.

அதனை செயல்படுத்தும் நோக்கில் காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கட லோர பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் செயல் படுவார் என தெரி விக்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரை ஒருங் கிணைத்தும், கடலோர காவல்படை ஆய்வாளர் தலைமை யில் இயங்கும் மெரினா கடற்கரை உயிர் காப்பு பிரிவில் கூடுதலாக 12 பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த நடவடிக்கை விரைந்து எடுத்திட அறிவுரை வழங்கப்பட்டது.

கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் அண்ணா நினைவிடம், காந்தி சிலை மற்றும் எலியட் கடற்கரை பகுதி களில் அதிக இறப்பு ஏற்பட்டு இருப்பதால் இப்பகுதிகளில் பாதுகாப்பு பயிற்சி பெற்ற உயிர்காப்பு படையினர் நிறுத் தப்பட வேண்டும் எனவும், கடற்கரையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவிப்புகளை வழங்கவும் கண்காணிக்கவும் 5 காவல் கண்காணிப்புக் கருவிகள் நிறுவ முடிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும் மெரினா கடற்கரை பகுதிகளில் விழிப்புணர்வு எச்சரிக்கை பலகைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டது.

அவசர உயிர் காக்கும் சேவைக்கு என இரண்டு 108 அவசர சிகிச்சை வாகனங்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம், கடலோர காவல்படை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி உயிர் இழப்பு இல்லாத பாதுகாப்பான சென்னை மெரினா கடற்கரையை உருவாக்க ஒத்துழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

காவல் துறையில் ஆயுத படை காவல்துறையினர் 50 பேருக்கு உயிர் காக்கும் நீச்சல் பயிற்சி அளித்து அவர் களையும் கூடுதலாக பணி அமர்த்த முடிவு செய்யப்பட்டது.

உயிர்காக்கும் நீச்சல் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்றலாம். அவர்கள் கட லோர பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டு அறை தொலை பேசி எண். 044-28447752 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment