போபால்,அக்.16- ஆடு, மாடுகள் ருசித்து சாப்பிடுவதற்கான சாக்லேட்டை 2 மாத கால ஆராய்ச்சிக்கு பின்னர் மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுபற்றி அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.பி.திவாரி கூறும்போது, “பல்வேறு வைட்ட மின்கள், தாதுக்கள் நிறைந்த சாக்லேட், கால்நடைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. பசுந்தீவனம் கிடைக்காதபோது, இதை கால்நடைகளுக்கு மாற்றுத்தீவனமாகவும் பயன்படுத்த லாம். மாநில கால்நடை பராமரிப்புத்துறையின் உதவியுடன் இந்த சாக்லேட்டுகள் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படும்” என தெரிவித்தார். இந்த சாக்லேட்டை கால்நடைகள் சாப்பிடுகிறபோது, அவற்றின் பால் உற்பத்தி அதிகரிக்கும். கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த சாக்லேட்டை கால்நடைகள் அப்படியே சாப்பிடலாம். பிற தீவனங்களுடன் சேர்த்தும் சாக்லேட்டை கால்நடைகளுக்கு தரலாம். ஒரு சாக்லேட்டின் எடை 500 கிராம் ஆகும்.
No comments:
Post a Comment