அரியக்குடி கொள்கை வீரர் வீர. சுப்பையாவுக்கு வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

அரியக்குடி கொள்கை வீரர் வீர. சுப்பையாவுக்கு வீர வணக்கம்!

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகில் உள்ள அரியக்குடி என்ற ஊரில் வாழ்ந்த சாக்கோட்டை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர், மேனாள் மாவட்டக் கழகச் செயலாளர், முதுபெரும் பெரியார் தொண்டர், தான் ஏற்றுக் கொண்ட கொள்கைப் படி நடந்து, இறுதிவரை இயக் கத்திற்காக கடுமையாக உழைத்த லட்சிய வீரர் அரியக்குடி மானமிகு

வீர. சுப்பையா (வயது 72) அவர்கள் காலமானார் (15.10.2021) என்ற துயரச் செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவரது மகளின் ஜாதி மறுப்புத் திருமணத்தை அவரே முன்னின்று, எனது தலைமையில் பல ஆண்டுகளுக்கு முன் அந்த ஆரிய சனாதனக் கோட்டையில் நடத்திச் சாதனை செய்தவர்.

தனது மரணத்திற்குப் பின் எவ்வித மூடச் சடங்குகளும் நடத்தப்படக் கூடாது; காரைக்குடி என்.ஆர்.எஸ். குடும்ப உறுப்பினர் வந்திருந்து என் உடலின்மீது கழகக் கொடியைப் போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்று மரண சாசனம் எழுதிய கொள்கை வீரர். சிறிது காலமாக உடல் நலக் குறைவுடன் வாழ்ந்தவர்.

அவரது இழப்பு குடும்பத்தாருக்கும், இயக்கத்திற் கும் ஈடற்ற இழப்பு ஆகும். அவரது குடும்பத்தினர்க்கு நமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு நமது வீர வணக்கம்.

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

16-10-2021         

குறிப்பு: 16.10.2021 காலை 10 மணியளவில் காரைக்குடி - இலுப்பக்குடி சாலை, கலைமணி நகர் 11ஆவது வீதியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு - இறுதி நிகழ்ச்சியில் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு  இறுதி மரியாதை செலுத்தினர்.

அவரது மருமகன் முனியாண்டியிடம் கழகத் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல் கூறினார்.

No comments:

Post a Comment