10 நாட்களில் தடுப்பூசி செலுத்துவதில் 70 சதவீதம் எளிதில் அடைய இலக்கு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

10 நாட்களில் தடுப்பூசி செலுத்துவதில் 70 சதவீதம் எளிதில் அடைய இலக்கு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, அக்.16 முதலமைச்சரின் தீவிர நடவடிக்கைகளினால் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தியதில் 70 சதவிகிதம் இலக் கினை எளிதில் அடையவிருக்கிறோம் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (15.10.2021) சென்னை மெட்வே ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் 5-ஆவது கிளையைத் தொடங்கி வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “உலகில் நடைபெறுகிற இறப்புகளில் 32 சதவிகிதம் இதய நோயினால் ஏற்படுகிறது என்று ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. சராசரியாக ஆண்டொன்றுக்கு 1 கோடியே 86 லட்சம் பேர் இதய நோயினால் இறக்கின்றனர்.

இந்நோயிலிருந்து மக்களைப் பாது காப்பதற்கு இதய நோய்க்கான விழிப் புணர்வு என்பது மிக அவசியமான ஒன் றாகும். இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கு ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக் கங்கள், உடற்பயிற்சி, போதைப் பொருட்கள் புகையிலையைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

முதலமைச்சர் ஒவ்வொரு முறை கரோனா தளர்வுகள் அறிவிக்கிறபோதும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தத் தவறுவதில்லை. முகக்கவசம் அணிவதில் தொடங்கி கரோனா காலத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகிறார்.

மாவட்ட ஆட்சி நிர்வாகங்கள், அதிக மாக மக்கள் கூடுகிற இடங்களில் விதி முறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என் றால், கூடுதலான அபராதங்களை விதித்துக் கொண்டும் நடவடிக்கை மேற்கொண்டும் வருகிறார்கள்.

செவிலியர்கள் குழு அமைத்து பேச்சு வார்த்தை

செவிலியர்கள் கடந்த நான்கு மாதங் களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டு மென்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மூன்று பேர் கொண்ட குழு அமைத்து அவர்களுடன் கலந்து பேசி 15 நாட்களில் தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியதற்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார்கள். 4,900 செவிலியர்களைப் புதியதாக எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தச் செவிலியர்களில் இவர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பதற்குத் தெரிவித்திருக்கிறோம்.

இந்திய தடுப்பூசி தமிழ்நாடும் தடுப்பூசி செலுத்துவதில் 8 அல்லது 9 இடத்தில் இருக்கிறது. கடந்த கால அதிமுக ஆட்சியில் ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சரியாக நடைபெறவில்லை.

மே-6 வரை சராசரியாக 61 ஆயிரத்து 441 பேருக்குச் செலுத்தியதில் 103 நாட்களில் 63 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகளைச் செலுத்தி யுள்ளனர். அதிலும், தடுப்பூசிகளை வீண டித்த மாநிலத்தில் தமிழ்நாடும் முதலிடத் தில் இருந்தது. 6 சதவிகிதம் அளவுக்கு 4 லட்சத்து 34 ஆயிரம் தடுப்பூசிகளை வீண டித்துள்ளனர். ஆனால், மே 7க்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சரின் தீவிர நடவடிக்கைகளுக்குப் பிறகு இன்று வரை 5 கோடியே 29 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

18 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப் பூசி செலுத்தியதில் 67 சதவிகிதம் பேருக்கு இதுவரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள் ளன. இன்னும் 10 நாட்களில் உலக சுகாதார நிறுவனம், அய்.சி.எம்.ஆர். தெரிவித்துள்ள வாறு 70 சதவிகிதம் என்ற இலக்கினை அடைய இருக்கிறோம்”.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment