போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக மதவாதப் பிரிவினையை ஏற்படுத்தும் திட்டமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக மதவாதப் பிரிவினையை ஏற்படுத்தும் திட்டமா?

போராட்டக் களத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்து தொங்கவிட்ட கொடுமை!

குர்காவ், அக் 16 அரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் எல்லைப்பகுதியில், சாலையில் போடப்பட்டிருந்த தடுப்பில், ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது கைகள் வெட்டப் பட்ட நிலையில், அவரது உடல் தொங்க விடப்பட்டுள் ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

இந்தக் கொடூரமான கொலையை, பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த  சீக்கிய அமைப்பான நிகாங் அரங் கேற்றியிருப்பதாக காவல் துறையினர் சந்தேகித்துள் ளனர். நிகாங் என்பது, சீக்கிய பயங்கரவாதிகளின் அமைப் பாகும்.

நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடை பெற்ற போராட்டம் வன் முறைக்களமானது. இந்த நிலையில், அரியானா மாநிலத் தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும்  சோனிபட் மாவட்டத்தில் குண்ட்லி என்ற இடம் அருகில் ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் அங்குள்ள சாலைத் தடுப்பில் தொங்கிக் கொண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்தது. நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும்,  கை வெட்டப்பட்டும் கிடந்த அந்த உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில், தங்க ளுக்கு  எந்தத் தொடர்பும் இல்லை என விவசாய அமைப் புகள் மறுத்துள்ளன. ஆனால், அம்மாநில பாஜகவினர், விவ சாயிகள்தான் இந்தக் கொலையை செய்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டி வருகின் றனர். இதனால், அங்கு பர பரப்பு ஏற்பட்டு உள்ளது.

அதே வேளையில், இந்த கொடூரமான கொலையை, பயங்கரவாத சீக்கிய அமைப் பான நிகாங் செய்திருக்கலாம் என்று தகவல்கள் பரவி வரு கின்றன. அவர்கள்தான் இது போன்ற கொடூரமான நிகழ்வு களை செய்பவர்கள் என்று கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட நபர் பெயர் லாக்பீர் சிங் என்பது தெரிய வந்துள்ளது. இவர்  சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாக கூறி நிஹாங்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் லாக்பீர் சிங்கை அடித்துக் கொன்றதாக அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கெனவே கடந்த ஆண் டும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ள காவல்துறையினர், கரோனா பொதுமுடக் கத்தின் போது, பாட்டியாலா வில், 'பாஸ்' காட்டும்படி, ஒருவரை கேட்டபோது, அந்த காவலரின் மணிக்கட்டை நிகாங் அமைப்பை சேர்ந்த நபர் வாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோலவே, இந்த கொலையும் நடை பெற்றுள்ளதால், இது நிகாங் அமைப்பினரின் செயலாக இருக்கும் சந்தேகப் படுவதாக கூறியுள்ளது.

உண்மையில் விவசாயிகள் போராட்டத்தை சீக்கியர் களின் போராட்டமாக மாற்றி சீக்கியர்களுக்கு எதிராக பிற மதத்தினரை திசை திருப்பி விவசாயிகள் போராட்டத் தினை வன்முறை மூலம் தடுத்து நிறுத்த அரசுக்கு ஆதர வான சில அமைப்புகள் களமிறங்கி உள்ளது.

  தமிழ்நாட்டில்  நடந்த ஜல்லிக்கட்டிற்கான போராட் டம் இதே போல் தான் அமை தியாக நடந்து கொண்டு இருந் தது, பின்னர் பெரும் வன்முறை யில் முடிந்தது.

அதே பாணியில் - _ தற் போது டில்லியில் நடத்தும் சூழ்ச்சியில் சீக்கிய மத அமைப் பினர் செய்த கொலை என்று திசை திருப்பும் விதமாக இந் தக் கொலை நிகழ்வை அரங் கேற்றி உள்ளதாக தெரிவிக் கின்றனர்.  நிகாங் அமைப்பினர் கொலை செய்வது போன்ற செயல்களைச்செய்ய மாட் டார்கள். ஆனால் சில கொலை களை சமூக விரோதிகள் செய்து விட்டு அதை நிகாங் அமைப்பினர் மீது பழி போட்டு விட்டு தப்பித்துவிடுவார்கள்.

 இம்முறை அதே போல் விவசாயிகள் போராட்டத்தை வன்முறைக்களமாக மாற்ற பாஜகவிற்கு ஆதரவான அமைப்புகள் சூழ்ச்சியோடு திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று போராடிவரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment