பணியிட மாற்றம் செய் யப்பட்ட காவலர்கள் ஒரு வாரத்திற்குள் பணியில் சேர வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந் திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
குணங்கள்
கிரீன் டீயில் கரோனாவை எதிர்க்கும் மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உயிரிழப்பு
இந்தியாவில் மேலும் 16,862 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 379 பேர் உயிரிழந்துள்ளனர்.
திறப்பு
விவசாயிகள் பயன் பெறும் வகையில், சுமார் 5,259 ஏக்கர் விவசாய நிலம் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீரை அமைச்சர் இ. பெரியசாமி திறந்து வைத்தார்.
விரிவுபடுத்த
கரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப் பித்துள்ளார்.
திரும்புகிறார்
தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் அய்.ஏ.எஸ். அதிகாரி அமுதா ஒன்றிய அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் தமிழ்நாடு பணிக்கு திரும்பு கிறார்.
நாடாளுமன்றம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 22ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக தலை நகர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத் தொடர் சுமார்
1 மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட்டிப்பு
புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, தளர்வுகளுடன் கூடிய ஊர டங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.
மீட்பு
சென்னை, வால்டாக்ஸ் சாலை பகுதியில் பால் கடம்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வடமாநி லத்தை சேர்ந்த நான்கு குழந்தை தொழி லாளர்கள் மீட்கப்பட்டனர்.
No comments:
Post a Comment